தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டைக்கு போயிருக்கீங்களா.?

டேனிஷ் கோட்டை என அழைக்கப்படும் டேனிய கோட்டை என்பது தமிழகத்தின் தரங்கப்பாடியில் வங்க கடலை ஒட்டியுள்ள ஒரு டென்மார்க்காரர்களின் கோட்டையாகும்.

இக்கோட்டை தஞ்சை அரசரான ரகுநாத நாயக்கருடன் டேனிஷ் அதிகாரியான ஓவ் கிட் என்பவரால் ஒப்பந்தம் செய்ய்யப்பட்டு 1620ல் கட்டப்பட்டது. டேனிஷ்காரர்களின் கோட்டைகளில் 2வது பெரிய கோட்டையாகும். 

இக்கோட்டை தரங்கம்பாடியோடு 1845ம் ஆண்டில் பிரித்தானியருக்கு விற்கப்பட்டது. அதன் பிறகு இந்த ஊரும், இக்கோட்டையும் தம் சிறப்பை இழந்தன

இந்தியா விடுதலையான 1947க்கு பின்னர் இக்கோட்டை தமிழக அரசால் ஆய்வு மாளிகையாக 1978ம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது

அதன்பிறகு தமிழக தொல்லியல் துறையின் கட்டு்ப்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது இங்கு அகழ் வைப்பகம் என்னும் அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது

இந்த அருங்காட்சியகத்தில் இந்த டேனிஷ் கோட்டை சார்ந்த பொருட்களும், டேனிஷ் காசுகள், டேனிஷ் - தமிழ் பத்திரங்கள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கோட்டை அண்மை காலத்தில் இருமுறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. 2001ல் டேனிஷ் மன்னர் குடும்பத்தின் உதவியுடன் மாநில தொல்லியல்துறை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டது.

அடுத்து 2011ல் தமிழக சுற்றுலா துறை மூலம் புதுப்பிக்கப்பட்டது. இந்த பகுதியில் இக்கோட்டை முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருக்கிறது

இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் தினமும் அதிக அளவில் இங்கு வருகின்றனர்.

கன்னியாகுமரி  அவ்வையார் அம்மன் கோயிலின் சிறப்புகள்.!