மேகமலை முருகன் கோயிலில் இத்தனை சிறப்புகளா.?

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே தென்பழனி பகுதியில் அமைந்துள்ளது தென் பழனி வழி விடும் முருகன் கோயில்.

மேகமலை பகுதிக்கு செல்லும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பாதுகாப்பான பயணத்தை மலைச்சாலையில் மேற்கொள்வதற்கு முன் இந்த கோயில் வழிபாடு நடத்திய பின்னரே செல்வர்

பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற நாட்களில் இந்த கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருப்பதை காண முடியும். மேலும் சுவாமிக்கு கிரீடம், மலர் மாலை அணிவிக்கப்பட்டு ராஜ அலங்காரத்தில் அருள்பாலிப்பார்.

பழனி, திருச்செந்தூர், திருத்தணி போன்ற கோவில்களுக்கு செல்லும் முன் தேனி மாவட்டத்திலுள்ள முருக பக்தர்கள் இந்த கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து பால் குடம் செலுத்திய பின்னரே செல்வர்

இந்த வழிவிடும் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், முருகனுக்கு அபிஷேகம் செய்தும் எலுமிச்சை விளக்கு செய்தும், 

கூடுதல் சில சிறப்பு பரிகாரங்கள் செய்வதன் மூலமும் திருமணத்தடை உள்ளவர்களுக்கு தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

தரங்கம்பாடியில் உள்ள டேனிஷ் கோட்டைக்கு போயிருக்கீங்களா.?