பெண்கள் தினசரி உணவில் சேர்க்க வேண்டிய 9 சூப்பர்ஃபுட்கள்.!

டார்க் சாக்லேட்

1

இதய ஆரோக்கியம் முதல் மூளையின் செயல்பாடு மேம்படுவது வரை பல ஆரோக்கிய பண்புகளைக் கொண்டுள்ள சில இனிப்புகளில் ஒன்று டார்க் சாக்லெட்.

யோகர்ட்

2

இதில் புரதச்சத்து அதிகமுள்ளதால் உடல் பருமனைக் குறைத்து தசைகளை சீர்படுத்துகிறது. மேலும் இதிலுள்ள அதிகளவு கல்சியம் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது.

ஆளி விதைகள்

3

கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறந்த மூலமான இதனால் ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் குறையும். மேலும் இதிலுள்ள உயர் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ரத்தத்திலுள்ள விரும்பத்தகாத கொழுப்புகளை குறைக்கும்

பப்பாளிப்பழம்

4

நரம்புகள் பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பெண்கள் சாப்பிடலாம்.

வால்நட்

5

ஒரு அவுன்ஸ் வால்நட்ஸில் 4கி புரதம், 2கி ஃபைபர், கார்போஹைட்ரேட், மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், செலினியம், வைட்டமின் பி & ஈ & நல்ல கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளது.

பச்சை இலை காய்கறிகள்

6

ஏராளமான ஊட்டச்சத்துக்கள் விட்டமின்கள் நிறைந்த இந்த காய்கறிகள் உங்கள் அன்றாட உணவின் வழக்கமான அங்கமாக இருக்கும்போது புற்றுநோய், இதய நோய் போன்ற பல நாட்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும்

முழு தானியங்கள்

7

அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முழு தானியங்களில் அதிகமான நார்ச்சத்தும் உள்ளது. இந்த நார்ச்சத்து நமது உடலின் செரிமான செயல்களுக்கு அத்தியாவசியமாக உள்ளது.

பெர்ரி

8

பெர்ரிகளில் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் உள்ளன. மேலும் நார்ச்சத்து நிறைந்த இவை முழுமையான உணவை எடுத்துகொண்ட திருப்தியை நமக்கு அளிக்கும்.

பீன்ஸ் & பருப்பு வகைகள்

9

புரதம் மட்டுமல்ல இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்பு, ஃபோலேட், பொட்டாசியம் போன்ற பிற முக்கிய ஊட்டச்சத்துக்களும் உள்ளன.

வலுவான மற்றும் நீண்ட முடி வளர்ச்சிக்கு உதவும் 9 பழங்கள், காய்கறிகள்.!