தேங்காய் ஓட்டில் கைவினைப் பொருட்கள் செய்யும் தஞ்சை கலைஞர்.!

தஞ்சையை சேர்ந்த கைவினை கலைஞர் குமரகுரு(61) சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டுள்ளார். 

தேங்காய் மற்றும் தேங்காய் ஓடுகளை சந்தைகளில் தரம்பிரித்து வாங்கி, அவற்றை இயந்திரத்தின் மூலம் கட்டிங் செய்து, பின்னர் தேங்காய் ஓடுகளை பாலிஷ் செய்து, 

கைவினை கலை பொருட்களுக்குத் தேவையான பூ டிசைனை உருவாக்கி, அவரின் எண்ணத்திற்கு ஏற்ப கலை நயமிக்க பொருட்களை உருவாக்கி வருகிறார்.

தேங்காய் ஓடுகளை மட்டுமே கொண்டு, அழகிய அலங்காரப்பொருட்கள் & வீட்டு உபயோகப்பொருட்களான தேனீர் கப், ஜார், கரண்டி, பர்ஸ், கீ செயின், அலங்கார அணிகலன்கள் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.

இதுவரை, இவருடைய கைவினைப் பொருட்கள் கனடா, ஆஸ்திரேலியா ஆகிய வெளிநாடுகளுக்கும் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இவருடைய கலைப் பொருட்கள் முழுக்க முழுக்க இயற்கை முறையிலான பொருட்களைக்கொண்டு மட்டுமே செய்யப்படுகிறது. மேலும் எந்த விதமான ரசாயன பூச்சும் இல்லாமல் தயாரிக்கப்படுகிறது

மேலும் மத்திய, மாநில அரசின் கைவினைப் பொருட்கள் கண்காட்சியிலும் இவருடைய கலைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சுமார் 700 நபர்களுக்கு கைவினை கலைப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சியினையும் இவர் வழங்கி உள்ளார்.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கோபுரம் இல்லாததற்கு என்ன காரணம் தெரியுமா.?