திருச்சியில் பார்வையாளர்களை கவரும் வண்ணத்துப்பூச்சி பூங்கா.!

புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருச்சி ஸ்ரீரங்கத்தில் சமீப ஆண்டுகளில் புதிய சுற்றுலா பகுதி ஒன்று உருவாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஸ்ரீரங்கத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டரில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா. வண்ணத்துப்பூச்சி பூங்கா என்றால் வண்ணத்துப்பூச்சிகள் மட்டும் தான் இங்கு இருக்கும் என நினைத்துக் கொள்ள வேண்டாம்.

இயற்கை எழில் கொஞ்சும் விதமாக வண்ணத்துப் பூச்சிகளை ஈர்க்கும் படி பல வகையான மரங்கள் செடிகள் இங்கு வளர்க்கப்படுகின்றன.

உள்ளே செல்லும்போதே வண்ணத்துப்பூச்சிகள் ஆங்காங்கே பறந்து திரிவதை காணலாம். விதவிதமான பூக்களுடனும் விதவிதமான செடி வகைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்கிருக்கும் அருவி மாதிரிகளை கண்டு ரசித்து திரும்பினால் ஊட்டி கொடைக்கானல் மாதிரியான இடங்களில் இருக்கும் தோட்டக்கலை பராமரிப்பு பார்க்கலாம்

அதோடு பல்வேறு வகையான வண்ணத்துப்பூச்சிகளின் புகைப்படங்கள் அவற்றின் வாழ்க்கை சுழற்சி குறித்த பலகைகள் ஏராளமானவை உள்ளே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

இங்கு சிறுவர்களுக்காகவே பிரத்தியேக பூங்காவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அதோடு பெரியவர்கள் இளைப்பாற்கு ஆங்காங்கே பல இருக்கைகளுடன் கூடிய குடிசை அமைப்புகள் உள்ளன

இந்த பூங்காவில் வண்ணத்துப்பூச்சிகளின் வரைபடங்கள் அடங்கிய குகை போன்ற அமைப்பானது குழந்தைகளை வெகுவாக ஈர்க்கிறது.

வண்ணத்துப் பூச்சி பூங்காவின் நுழைவு கட்டணமானது பெரியவர்களுக்கு 15 ரூபாய் எனவும் சிறியவர்களுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

2000 ஆண்டுகள் பழமையான திருப்பூர் சுக்ரீஸ்வரர் கோவிலின் வரலாற்று சிறப்புகள் தெரியுமா.?