மீண்டும் திறக்கப்பட்ட 'கோவை குற்றாலம்'.!

கோவை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலை முகடுகளுக்கு இடையே அமைந்துள்ளது கோவை குற்றாலம்.

சுற்றிலும் அடர் வனம், பறவைகளின் கீச்சொலிகள், வனத்திற்குள் நடை பயணம், இரவு நேரத்தில் தங்குவதற்காக மர வீடுகள் என பல்வேறு அனுபவங்களை கோவை குற்றாலம் கொண்டுள்ளது.

கோவை காந்திபுரத்தில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த சுற்றுலாத்தளம் குடும்பத்தினருடன் சென்று அருவியில் குளித்து மகிழ ஏற்ற இடமாக உள்ளது.

கோவை குற்றாலத்திற்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களும், வெளி மாநில சுற்றுலாப்பயணிகளும் வந்து செல்கின்றனர். வார இறுதி நாட்களில் இங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதும்

இந்த சூழில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த மாதம் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து. இதனால் சுற்றுலாப்பயணிகள் பாதுகாப்பு கருதி ஜூலை மாதம் 5 ம் தேதி கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

தொடர்ந்து ஜூலை மாதம் 12ம் தேதி திறக்கப்பட்ட கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக மீண்டும் ஒரு சில தினங்களிலேயே மூடப்பட்டது. இது சுற்றுலாப்பயணிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்தது.

இந்நிலையில் மழை குறைந்ததால் கோவை குற்றாலம் அருவிகளில் நீர் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மீண்டும் திறக்கப்படுவதாக வனத்துறை அறிவித்தது.

அதன்படி இன்று (ஆகஸ்ட் 8ம் தேதி) கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டது. இது சுற்றுலாப்பயணிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வண்ண ஓவியங்களால் பளபளக்கும் கோவை காந்திபுரம் மேம்பாலம்.!