ஆடி கிருத்திகையில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு எதற்காக.?

ஆடி மாதம் என்றாலே அனைத்து அம்மன் கோவில்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இதனிடையே ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நாளில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது

முருகனுக்கு பல்வேறு அலங்காரங்களை செய்து பொதுமக்கள் வழிபடுகின்றனர்

ஆடி கிருத்திகை தினத்தன்று ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியது எல்லாம் கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை

கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தன் என்று அழைக்கப்படும் முருகனுக்கு பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர்.

அப்போது கந்தனுக்கு பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன், கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான் என்றும்

கிருத்திகை நட்சித்திர நாளில் மக்கள் விரதமிருந்து முருகனை வழிபடுவோர் என்றும் சிவபெருமான் வரம் கொடுத்ததாக மக்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது

இதற்காகவே கிருத்திகை வழிபாடு நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை தினத்தில் அனைத்து முருகன் கோவில்களிலும் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்

கோவையில் மருதமலை உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் முருகனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

பீளமேடு பால விநாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால முருகனுக்கு நெய் வேத்தியம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது.

திருமண தடை நீக்கும் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இடுவாய் சித்தி விநாயகர் கோயில்.!