ஈரோடு வ.உ.சி பூங்காவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா.?

ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகாமையில் உள்ள வ.உ.சி பூங்கா முன்காலத்தில் மிருக காட்சி சாலை மற்றும் பொழுதுபோக்கு பூங்காவாக இருந்தது. பின்னர் பொதுமக்கள் வந்து செல்லும் பூங்காவாக மாறியது

செயற்கை நீரூற்றுகள், செயற்கை குளங்கள் என்று அப்போதைய ஈரோடு நகராட்சி வ.உ.சி.பூங்காவை பராமரித்து வந்தது. பூங்காவின் ஒரு பகுதியில் குழந்தைகள் பூங்கா தனியாக உருவாக்கப்பட்டு அதில் பல்வேறு விளையாட்டு உபகரணங்களும் அமைக்கப்பட்டு இருக்கிறது

வ.உ.சி பூங்கா, காதலர் பூங்கா சிறுவர்கள் பூங்கா என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. காதலர் பூங்காவில் பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது

சிறுவர்கள் பூங்கா சற்று பரவாயில்லை ஊஞ்சல், சறுக்குமரம் என சொல்லும் விதமாக சில அம்சங்கள் கொண்டதாக அமைந்துள்ளது. பூங்காவை சுற்றிலும் உள்ள வண்ண ஓவியங்களின் அழகோ அழகு

தற்போது ஈரோடு வ.உ.சி.பூங்கா (காதலர் பூங்கா) வேலை இல்லாதவர்கள் படுத்து தூங்கும் தலமாகவும், காதல் ஜோடிகள் பொழுதுபோக்கும் இடமாகவும் மாறியுள்ளது

இதனால் குடும்ப பெண்கள் குழந்தைகளுடன் வந்து பொழுதுபோக்க ஏற்ற தலமாக இல்லாத நிலை என்று கூறுகின்றனர்

ஈரோடு மக்களின் ஒரே பொழுதுபோக்கு தலமாக விளங்கும் வ.உ.சி.பூங்காவை சீரமைத்து கூடுதல் வசதிகள் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்

அரிய வகை பறவைகளை கொண்டு அசத்தும் உதகை பறவைகள் பூங்கா.!