ஆளைக் கொல்லும் ஆல்கஹால்.. 

ஆளைக் கொல்லும் ஆல்கஹால்.. 

ஆண்களை  விட  பெண்களுக்கு  அதிக பாதிப்பு!

விளைவுகள் வேறு

ஆண்கள் மற்றும் பெண்கள் மத்தியில் மது அருந்துவது ஒரு பொதுவான பழக்கமாக உள்ளது. ஆண்களை விட பெண்கள் மதுவின் தீய விளைவுகளுக்கு அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. 

1

பாதிப்பு அதிகம் 

ஆணும், பெண்ணும் சம அளவிலான மதுவை அருந்தினாலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களின் இரத்தத்தில் மதுவின் அளவு கூடுதலாக இருக்கிறதாம்.

2

ஏன் அதிகம் பாதிக்கிறது?

இந்திய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையத்தின் ஆய்வறிக்கையின்படி, பெண்களின் உடல் அமைப்பு மற்றும் ரசாயன மாற்றங்கள் ஆண்களை காட்டிலும் வேறுபடுகிறது. இதனால் பெண்களின் உடலானது ஆண்களை காட்டிலும் கூடுதலான மதுவை உறிஞ்சி கொள்கிறது.

3

மெட்டபாலிச பாதிப்பு

ஒரே எடை கொண்ட ஆண்களை காட்டிலும் பெண்களின் உடலில் நீர்ச்சத்து மிக குறைவாக இருப்பதனால்  அவர்களது உடல் மதுவை கூடுதலாக உறிஞ்சும் மற்றும் மதுவின் நச்சுகளை பெண்களின் உடல் குறைவாக  வெளியேற்றும்

4

கல்லீரல் பாதிப்பு

பெண்களின் இனப்பெருக்கத்திற்கு உதவும் ஹார்மோன் ஓஸ்ட்ரோஜன் காரணமாக அவர்களுக்கு மதுவால் ஏற்படும் பாதிப்புகள் கூடுதலாக இருக்கும். கல்லீரல் அழற்சி ,கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் கொழுப்பு பாதிப்பு நோய் விரைவாக உண்டாகும்.

5

மூளை பாதிப்பு 

எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை முடிவுகளில் மது அருந்தும் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு மூளை பாதிப்பு கூடுதலாக இருக்கிறதாம்  குறிப்பாக மூளையின் அளவு சுருங்குகிறதாம். 

6

இதய நோய்

கட்டுப்பாடு இன்றி மது அருந்தும் ஆணுக்கு எந்த அளவுக்கு இதய நோய் பாதிப்பு ஏற்படுமோ அதே பாதிப்பு மிதமான அளவில் மது அருந்தும் பெண்களுக்கும் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

7

இருபாலருக்குமே சிக்கல்

பெண்களுக்கு அதிக பாதிப்பு என்றாலும் குடிப்பழக்கம் இரு பாலருக்குமே  உடல் பிரச்னையை உண்டு செய்யும். குடிப்பழக்கத்தை முற்றிலும் தவிர்ப்பதே ஆரோக்கியத்துக்கு நல்லது.

ஒரு மாதம் சர்க்கரையை தவிர்த்தால் என்ன நடக்கும்.?