திருச்சி பூம்புகார் விற்பனை நிலையத்தில் என்னென்ன பொருட்கள் இருக்கு தெரியுமா.?

திருச்சி சிங்காரத் தோப்பு பேருந்து நிறுத்தம் பக்கத்தில் திருச்சி மாவட்ட மைய நூலகம் எதிரே அமைந்துள்ளது பூம்புகார் விற்பனை நிலையம்

இதில் மரம், செப்பு, முத்து, வெண்கலத்தால் ஆன நிறைய கைவினை பொருள்கள் உள்ளன

கைவினைப் பொருட்கள், குறைந்த விலையில் வீட்டு அலங்கார பொருட்கள், பித்தளை, மரம் போன்றவற்றில் பரிசுப் பொருட்களும் இங்கு இருக்கின்றன

குழந்தைகள் விளையாடும் விதமாக மரத்தினால் ஆன விளையாட்டு பொருட்கள் இல்லத்தரசிகளுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் உபயோகப்படுத்தக்கூடிய துணி பைகள்,

கைப்பைகள், கூடைகள், பணப்பை, வண்ண வண்ணமான ஓவியங்கள், சிறுவர்கள் பயன்படுத்தக்கூடிய வண்ண பென்சில்கள், பேனாக்கள், பெட்டிகள், வீடுகளில் பயன்படுத்தப்படும் பூஜை பொருட்கள் உள்ளன

மேலும் மரத்தால் ஆன சிற்பங்கள், வெண்கல சிற்பங்கள் வெள்ளி நிற சிற்பங்கள், தங்க நிற சிற்பங்கள் மற்றும் புத்தர் சிலை, திருவள்ளுவர் சிலை அதோடு முத்தால் செய்த மணிகள் மற்ற அலங்காரப் பொருட்கள்

அலங்கார பொருட்களை பத்திரப்படுத்தும் விதமாக பல வடிவங்களில் பெட்டிகள், சிறு சிறு கடவுள் சிலைகள், கடிகாரங்கள், தலையாட்டி பொம்மை, கொலுசு, முத்துமாலை, படிக மாலை, வளையல்கள், விளக்குகள்,

வீடுகளில் அலங்காரத்திற்கு தொங்க விடப்படும் பலவிதமான பொருட்கள் ஆகியவை இங்கு கிடைக்கின்றன பொருட்கள் அனைத்தும் தரமானதாகவும் மக்களிடமிருந்து நேரடியாக பெற்று விற்பனை செய்யும் இடமாகவும் உள்ளது

பூம்புகார் விற்பனை நிலையத்தில் பாரம்பரியமான அனைத்து பொருட்களும் கிடைக்கின்றன. அதோடு சந்தனக் கட்டை, வாசனை திரவியங்கள் வலி நிவாரணி,

தலைவலி தைலம் போன்று இயற்கையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் இங்கு அதிகமாக உள்ளன. இந்த நிலையம் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இருக்கும்

3 லட்சத்துக்கும் அதிகமாக விற்பனையாகும் தஞ்சாவூர் ஓவியங்கள்.! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா.?