98 ஆண்டு கால வரலாற்றை சுமந்து நிற்கும் உதகையின் பிரம்மாண்ட தூரிப்பாலம்.!

நீலகிரி மாவட்டத்திற்கு வந்து செல்ல 2 வழித்தடங்கள் உள்ளது. ஒன்று மேட்டுப்பாளையம் இருந்து கோத்தகிரி வழியாக வந்து சேரலாம் மற்றொன்று உதகை பர்லியார் மலைப்பாதை.

உதகை மேட்டுப்பாளையம் சாலையில் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த தூரிப்பாலம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொங்கும் இரும்பு பாலமாக அமைக்கப்பட்ட இந்த தூரி பாலம் கூண்டு வடிவில் அமைக்கப்பட்டது

சுமார் 65 மீட்டர் நீளமும் 10 மீட்டர் உயரமும் கொண்ட இந்த பாலம். சம வெளிப் பாதையில் இருந்து மலைப்பாதையை இணைக்கும் தூரிப்பாலமானது 1925 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது

அதற்கு முன்னதாக அருகாமையில் இருந்த பாலமே உண்மையான தூரிபாலம் என்று அழைக்கப்பட்ட நிலையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வாகனங்கள் சென்று வருவதற்கு வசதியாக அமைக்கப்பட்ட இந்த பாலம் 98 வருடங்களாக கம்பீரமாக நிற்கிறது

எந்த ஒரு ஊன்றுகோலும் இல்லாமல் அந்தரத்தில் நிற்பது போல பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த பாலம் சமீப காலமாக மூடப்பட்டுள்ளது

இதன்மேல், கனரக வாகனங்கள் சென்று வருவதால் பாலத்திற்கு சேதம் ஏற்படும் என்ற அச்சதில் பாலத்தை அடைத்து விட்டு மாற்று வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது

அரிய வகை பறவைகளை கொண்டு அசத்தும் உதகை பறவைகள் பூங்கா.!