மலம் இந்த நிறத்தில் இருந்தால் உங்களுக்கு வயிற்று புற்றுநோய் இருக்கலாம்... உஷாராக இருங்கள்..!

மலம் இந்த நிறத்தில் இருந்தால் உங்களுக்கு வயிற்று புற்றுநோய் இருக்கலாம்... உஷாராக இருங்கள்..!

புறக்கணிக்கக் கூடாத வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகளை பட்டியலிடுகிறார் டாக்டர்.ராய் பதங்கர். இரைப்பை குடல் மருத்துவரான இவர் மும்பையிலுள்ள ஜென் மல்டிஸ்பெசாலிட்டி மருத்துவமணையின் இயக்குனராக இருக்கிறார்.

வயிறு உப்புசம்

புற்றுநோய் உங்கள் அடிவயிற்றின் அடுக்குகளில் பரவத் தொடங்கி, வயிற்றுக்குள் திரவங்கள் தேங்க காரணமாகிறது. இதனால் உங்கள் வயிறு உப்புசம் ஏற்பட்டு கர்ப்பம் ஆனது போல் வீங்கி போயிருக்கும்.

1

புளித்த ஏப்பம்

உங்களுக்கு தொடர்ந்து அசிடிட்டி பிரச்சனை இருந்து வந்தால்,  வயிற்றுப் புற்றுநோயாக கூட இருக்கலாம். இந்த வகையான புற்றுநோய்களுக்கு அசிடிட்டி முக்கியமான அறிகுறியாகும்.

2

வாந்தி

வயிற்றுப் புற்றுநோய் இருந்தால் அடிக்கடி வாந்தி ஏற்படும். ஏனென்றால் நீங்கள் சாப்பிடும் உணவு, ஜூஸ் ஆகியவை சிறுகுடலை தாண்டிச் செல்ல முடியாது. இதுதான் உங்களின் செரிமான அமைப்பில் முதலில் இருக்கக் கூடியதாகும். ஆகையால் சாப்பிட்டதும் அடிக்கடி வாந்தி ஏற்படும் நோய்வாய்ப்படுவீர்கள்.

3

உடல் எடை குறைதல்

தொடர்ந்து குமட்டல், வாந்தி, வயிற்று வலி இருந்தால், உங்களால் உணவருந்த முடியாது. இதனால் உங்கள் எடை தானாக குறையத் தொடங்கும்.

4

பலவீனமடைதல்

உங்களின் தினசரி கடமைகளை கூட செய்து முடிக்க மிகவும் சிரமப்படுகிறீர்களா? அப்படியென்றால் வயிற்றுப் புற்றுநோயினால் ஏற்படும் அதிகப்படியான உடல் பலவீனமே இதற்கு காரணமாகும். இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக மருத்துவரின் சென்று ஆலோசனை பெறுங்கள்.

5

நிறம்பியது போன்ற  உணர்வு

சாப்பிட்டதும் நம் மார்பு பகுதிக்கு கீழுள்ள மேலடுக்கு அடிவயிற்றுப் பகுதி நிறம்பியது போன்ற உணர்வு ஏற்படும். இதுவும் வயிற்றுப் புற்றுநோயின் இன்னொரு அறிகுறியாகும்.

6

அஜீரணம்

சாதாரணமாக ஒருவருக்கு வயிற்றுப் புற்றுநோய் இருந்தால், அவருக்கு அஜீரணம் மற்றும் பசியின்மை ஏற்படும்.

7

அடிவயிற்று வீக்கம்

அடிவயிற்று வீக்கம் காரணமாக உங்களுக்கு நிறைய சிரமம் ஏற்படும். நிச்சியம் இது வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

8

மலத்தின் நிறம் 

வாந்தியும் கருப்பு நிறத்தில் வந்தால், அது வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகளாகும். இதை எளிதில் புறந்தள்ள முடியாது.

9

அதேப்போல் உங்கள் குடும்பத்தில் யாருக்காவது இதற்கு முன் வயிற்றுப் புற்றுநோய் இருந்தால், நீங்கள் அதிக கவனத்தோடு இருக்க வேண்டியது அவசியமாகும்.

வயதானவர்களுக்கு மலச்சிக்கலை ஏற்படுத்தும் 8 உணவுப் பொருட்கள்.!