கோவை ஆதி கருமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற  கும்பாபிஷேக விழா.!

கோயம்புத்தூர் ரத்தினபுரி பகுதியில் ஆதி கருமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது

இந்த கோயிலின் கும்பாபிஷேக விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது

தினமும் மூல தெய்வமான கருமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க வேள்வி யாகம் நடத்தப்பட்டது

இதனைத்தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து ரத்தினபுரி, கண்ணப்ப நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்து முளைப்பாரி காணிக்கை செய்தனர்

தொடர்ந்து கோவிலில் கலச பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

பாளையங்கோட்டை உச்சினி மாகாளி அம்பாள் தல வரலாறு பற்றி தெரியுமா.?