ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன..? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது என்ன..? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

நேர்மை

பெண்கள், தாங்கள் விரும்பும் ஆண்களிடம் எதிர்பார்ப்பது நேர்மையை தான். உங்களின் உணர்ச்சிகள் எதுவாக இருந்தாலும், அவர்களிடம் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைப்பார்கள்.

ஏற்றுக்கொள்ளுதல்

தங்களை முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அப்போது, உங்கள் மீது அன்பும், பாசமும் அதிகரிக்கும். சில விஷயங்கள் தவறாக இருக்கும்பட்சத்தில், அவர்களே உணர்ந்து கொண்டு உங்களிடம் மன்னிப்பு கேட்கவும் தயாராக இருப்பார்கள்.

நம்பிக்கை

ரிலேஷன்ஷிப்பிற்கு முக்கியமான அஸ்திவாரம் நம்பிக்கை. அந்த நம்பிக்கை கேள்கவிக்குள்ளாகும்போது எந்த ரிலேஷன்ஷிப்பும் நிலைக்காது. ஆண்கள்  வைத்திருக்கும் நம்பிக்கைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் பெண்கள்  உறுதியாக இருப்பார்கள்.

இலக்கு

இலக்கை அடைய நினைப்பவர்களிடம் சில கட்டுப்பாடுகளும், வெளிப்படையான பார்வையும், செய்ய வேண்டிய செயல்கள் குறித்த தெளிவும், போகும் பாதை குறித்த புரிதலும் சரியாக இருக்கும். அத்தகைய ஆண்களை பார்க்கும்போது, பெண்கள் ஈர்ப்பு கொள்வார்கள்.

உணர்ச்சிகள்

பெண்களிடம் உணர்ச்சிகளை வெளிக்காட்டும்போது, உங்களை அரவணைக்க தயங்கமாட்டார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதனை அப்படியே அவர்களிடம் வெளிப்படுத்திவிடுங்கள். உங்களுக்கான தீர்வை நிச்சயம் கொடுப்பார்கள். அவர்கள் முன் நீங்கள் அழுதால், சோர்வாக இருந்தால், விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தால் அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள்.

தன்னடக்கம்

தற்பெருமை, பொறாமை குணம் கொண்டவர்களை பெண்களுக்கு பிடிக்காது. தன்னடக்கத்துடன் நடத்து கொள்ளும் ஆண்களை அவர்கள் அதிகம் விரும்புவார்கள்.

உறுதி

நிலையான அல்லது உறுதியான மனநிலையில் பயணிக்க ஆண்கள் முயற்சி செய்ய வேண்டும். குழப்ப மன நிலையில் இருப்பவர்களை பெண்களுக்கு பிடிக்காது. வார்த்தை, நடவடிக்கையில் உறுதியாக இருந்தால், பெண்களுக்கு பிடிக்கும்.

மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய 8 விலங்குகள் சரணாலயங்கள்