2 அடி முதல் 12 அடி வரை.. கோவையில் கலர் கலராக தயாராகும் பிள்ளையார்.!

விநாயகர் சதூர்த்திக்கு பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு அதனை நீர் நிலைகளில் கரைத்து வழிபடுவது வழக்கம்

அந்த வகையில் வரும் செப்டம்பர் மாதம் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவையில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணியில் ராஜகணபதி என்ற நிறுவனத்தினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்

கோவையில் உள்ள பெரிய சிலை தயாரிப்பு கூடமாக இந்த நிறுவனம் செயல்படுகிறது. சுண்டக்காமுத்தூர் பகுதியில் செயல்படும் இந்த நிறுவனத்தினர் காகிதக்கூழ் மற்றும் களிமண் கொண்டு விநாயகர் சிலைகள் மற்றும் கொலு பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்

கோவை மட்டுமல்லாது, நீலகிரி, ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கும், பழநிக்கும் இங்கு தயாரிக்கப்பட்ட சிலைகள் அனுப்பிய வைக்கப்படுகின்றன. இங்கு தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் உழைத்து விநாயகர் சதூர்த்திக்காக சிலைகளை தயாரிக்கின்றனர்

2 அடி முதல் 12 அடி வரையில் உள்ள விநாயகர் சிலைகள் களிமண் கொண்டும், 12 அடிக்கு மேல் உள்ள சிலைகள் காகிதக்கூழ் கொண்டும் தயாரிக்கப்படுகின்றன

நீரில் எளிதில் கரையும் தன்மையுடைய வண்ணங்களை மட்டுமே சிலைகளின் மேல் பூசப்படுகின்றன. இவர்களிடம் 50 ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை சிலைகள் கிடைக்கின்றன

இந்தாண்டு மங்கள விநாயகர், சிம்ம விநாயகர், அன்ன விநாயகர், லட்சுமி விநாயகர், குபேர விநாயகர், தாமரை விநாயகர் உள்ளிட்ட வெவ்வேறு விநாயகர் சிலைகள் இங்கு தயாராகி வருகின்றன

இதுவரை 16 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையே தாங்கள் தயாரித்த உயரமான சிலை என்றும் இந்தாண்டு 12 அடி உயரம் கொண்ட விநாயகர் சிலையே அதிக உயரம் உடைய சிலையாக தயாரித்து இருப்பதாகவும் தெரிவிக்கிறார் ராஜகணபதி நிறுவனத்தின் உரிமையாளர் சரவணன்

திருச்சியின் மலைக்கோட்டை தாயுமானவர் கோயிலின் சிறப்புகள் தெரியுமா.?