ஊட்டச்சத்துக்களின் ஆரோக்கியமான ஆதாரமான பாகற்காயை அதன் கசப்பு காரணமாக நாம் தவிர்க்கிறோம்
அதனால் பாகற்காயில் இருந்து கசப்பை நீக்குவதற்கான சில எளிய உதவிக்குறிப்புகளை அடுத்தடுத்த ஸ்லைடில் தெரிந்துகொள்ளுங்கள்...
பாகற்காயை நறுக்கும் போதே விதைகளை நீக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் இது இறுதி உணவின் கசப்பைக் குறைக்க உதவுகிறது
1
தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அதில் பாகற்காயை 5 நிமிடங்களுக்கு ஊறவைத்து பிறகு சமைக்கலாம்
2
பாகற்காய் துண்டுகளை நீர்த்த தயிரில் 60 நிமிடம் ஊறவைத்தால் அது கசப்பைக் குறைக்க உதவும்
3
சமைக்கும் போது ஒரு டீஸ்பூன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்ப்பது கசப்பை குறைக்க உதவும்
4
கரடுமுரடான மேற்பரப்பை நீக்கி மென்மையாக்கிவிட்டால் அது அதன் கசப்பைக் குறைக்கும்
5
சர்க்கரை மற்றும் வினிகர் சம அளவு கலந்து அதில் பாகற்காய் துண்டுகளை ஊற வைத்தால் அதன் கசப்பு தன்மை நீங்கும்
6
பாகற்காயை நன்கு வறுப்பதன் மூலம் அதன் கசப்பு தன்மையை நீக்குவதற்கு உதவுகிறது
7
பாகற்காயை துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் விடவும். பிறகு அவற்றைக் கழுவி சமைத்தால் கசப்பு தெரியாது
8