மதுரையில் கிருஷ்ணர் பொம்மை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்.!

இந்து மக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ணன் பிறந்தநாளை கிருஷ்ண ஜெயந்தி திருநாளாக ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது

இத்திருநாளில் மக்கள் அனைவரும் வீட்டில் கிருஷ்ணன் சிலைக்கு பூஜை செய்து படையல் இட்டு, தங்கள் குழந்தைகளுக்கு கிருஷ்ணன் வேடம் போட்டு தீபாரதனை காட்டி கோலங்கள் போடப்பட்டு குடும்பங்களோடு சேர்ந்து உற்சாகமாக கொண்டாடுவார்கள்

இந்த நிலையில் மதுரையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாட்டுத்தாவணி அருகில் இருக்கக்கூடிய சர்வேயர் காலனி பகுதியில் உள்ள வட மாநில ஊழியர்கள் சாக்பீஸ் கொண்டு மோல்ட் மூலமாக கிருஷ்ண பொம்மைகளை விற்பனை செய்து வருகின்றனர்

கலர் கலரான கிருஷ்ண பொம்மைகள், ராதையுடன் இருக்கும் கிருஷ்ணன், பொம்மைகள் கன்றுடன் இருக்கும் கிருஷ்ணன், புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன், வெண்ணை திருடும் கிருஷ்ணன், 

மயில் இறகு கொண்ட கிருஷ்ணன், குழந்தை பருவத்தில் தவழும் கிருஷ்ணன் என பல வகையான கிருஷ்ண பொம்மைகளை சாலையோரத்தில் விற்பனை செய்து வருகின்றார்கள்

ஒரு அடியில் இருந்து 5 அடி என்ற வகையில் இருக்கக்கூடிய பலவகையான கிருஷ்ணர் சிலைகள் 200 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் என்ற வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது

மேலும் கிருஷ்ணன் ஜெயந்தி நெருங்கிக் கொண்டிருப்பதால் வீட்டில் பூஜை செய்வதற்கு என்று மதுரை மக்கள் அனைவரும் கிருஷ்ணன் சிலைகளை வாங்குவதில் ஆர்வம் காட்டியும் வருகின்றனர்

இயற்கையான முறையில் கலர் கலராக தயாராகும் விநாயகர் சிலைகள்.!