வண்ணங்களிலும், டிசைன்களிலும் புடவைகளுக்கே சவால் விடும் சென்னிமலை பெட்ஷீட்.!

ஈரோட்டிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னஞ்சிறு ஊர்தான் சென்னிமலை. வண்ணங்களிலும், டிசைன்களிலும் புடவைக்கே சவால் விடுகின்றன சென்னிமலை போர்வைகள்

பல வண்ணங்களில், பற்பல டிசைன்களுடன் தரத்திலும், நிறத்திலும் சென்னிமலை போர்வை தனிச்சிறப்பாக இருப்பதால் இதன் மவுசு எப்போதும் குறையவே இல்லை

இங்கு தயாரிக்கப்படும் போர்வைகள் கைத்தறியால் நெய்யப்படுபவை என்பதால் இதன் ஆயுள் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிக்கிறது

இங்கு தயாராகும் போர்வைகளில் 90 சதவிகிதத்துக்கும் மேலானவை கைத்தறியால் நெய்யப்படுபவை. ஆரம்ப காலங்களில் பிளைன் ரகங்கள் மட்டும்தான் தயாரிக்கப்பட்டது. ஆனால் இப்போது அனைத்து விதங்களிலும் போர்வைகள் தயார் செய்து வருகின்றனர்

இங்கு தயாரிக்கப்படும் ஜக்காடு வகை போர்வைகள் தனிச் சிறப்பானது. டிசைன் நேர்த்தியோடு நெய்யப்படும் இந்த ஜக்காடு வகை போர்வை கம்பளி போர்வை போல அடர்த்தியாக இருக்கிறது

பெரும்பாலும் கூட்டுறவு சங்கங்கள் மூலமே விற்பனை நடப்பதால் பத்து முதல் முப்பது சதவிகித தள்ளுபடி விலையில் கிடைத்துவிடும். தேக்கமில்லாமல் எப்போதும் விற்பனை இருப்பதால் பழையது, புதியது என்கிற பிரச்னையே இல்லை

தலையணை உறை, துண்டு, கால்மிதிகளும் சில்லறை விலையில் தரமானதாக வாங்கிவர சென்னிமலை சரியான இடம்

நீலகிரி தோடர் இன மக்களின் பூத்துக்குளி சால்வையின் சிறப்புகள் தெரியுமா.?