உங்கள் பிள்ளை படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்த இந்த மாதிரி பண்ணி பாருங்க

படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கான சில காரணங்கள்

 பதட்டம் & பயம், சிறுநீர் பாதை தொற்று (UTI), மலச்சிக்கல், சிறுநீர்ப்பை சிறிய அளவில் இருப்பது – சிறுநீரைத் தக்கவைக்கும் திறன் குறைவாக இருத்தல் மற்றும் ஸ்லீப் ஆப்னியா (தூங்கும் பொழுது மூச்சு விடுவதில் ஏற்படும் அசாதாரணமான தற்காலிக இடைவேளைகள்) போன்ற காரணங்களால் இது நிகழலாம்

படுக்கையில் சிறுநீர் கழிக்கும் அபாயம்

பாலினம் மற்றும் மரபணு ஆகிய இரண்டுமே குழந்தை பருவத்தில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கான பழக்கம் உருவாவதற்கான காரணமாக அமைகிறது.

படுக்கையில் சிறுநீர் கழிப்பதை சமாளிக்க உதவும் ஒரு சில வாழ்க்கை முறை மாற்றங்கள்:

பகல் நேரத்தில் உங்கள் குழந்தைக்கு தேவையான திரவங்களை கொடுக்கவும்

1

உங்கள் பிள்ளை வழக்கமான முறையில் கழிப்பறையை பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பகல் நேரத்தில் 5 முதல் 7 முறை சிறுநீர் கழித்திருக்க வேண்டும். படுக்கைக்கு செல்லும் முன்பு கட்டாயமாக உங்கள் பிள்ளை சிறுநீர் கழித்து விட்டதா என்பதை கவனியுங்கள்.

2

உங்கள் குழந்தை படுக்கைக்கு செல்வதற்கு முன்பு கழிப்பறையை பயன்படுத்தும் பொழுது அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏதேனும் பரிசுகளை வழங்கவும் .

3

மெத்தை மற்றும் போர்வை மீது வாட்டர் ப்ரூஃப் கவர்களை பயன்படுத்தவும்

4

மெத்தை மற்றும் போர்வை மீது வாட்டர் ப்ரூஃப் கவர்களை பயன்படுத்தவும்

5

இரவு நேரத்தில் அவர்கள் கழிப்பறையை எளிதாக பயன்படுத்தும் வகையில் சூழலை அமைத்துக் கொடுங்கள்

6

உங்கள் பிள்ளை இந்த பழக்கத்தில் இருந்து மீண்டு வருவதற்கு உங்கள் பிள்ளையுடன் சேர்ந்து நீங்கள் வேலை செய்ய வேண்டும். உங்கள் பிள்ளை ஒரு சில பொறுப்புகளை எடுத்துக் கொள்வதற்கு உதவி செய்யுங்கள். உதாரணமாக படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் கால் சட்டையை தாமாக மாற்றிக் கொள்வது மற்றும் உலர்ந்த துண்டு விரித்து அதன் மீது படுத்து உறங்குவது போன்றவற்றை உங்கள் பிள்ளையே செய்யுமாறு அவர்களை ஊக்குவிக்கவும்.

7

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?