பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள் என்னென்ன ? வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள்

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, மலத்தின் மாறுபட்ட நிறம், மலத்துடன் ரத்தம் வருவது, மலக்குடல் ரத்த போக்கு, அதிகப்படியான வாயு, வயிற்றுப் பிடிப்பு மற்றும் வயிற்று வலி உள்ளிட்டவை கூட இந்நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.

1

சிகிச்சை

அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி போன்ற பன்மடங்கு அணுகுமுறைகளுடன் அளிக்கப்படும் சிகிச்சை இப்போது நோயாளியின் நல்வாழ்வில் கவனம் செலுத்தி அவர்களை நோயில் இருந்து விரைவாக மீட்கிறது. ஆனால் சிகிச்சைக்கு முன் நினைவில் நாம் கொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், சிகிச்சையானது பெரும்பாலும் புற்றுநோய் இருக்குமிடம் , அதன் ஸ்டேஜ் மற்றும் பிற உடல்நலக் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை பொறுத்தது என்பதே.

2

வருமுன் காப்போம்

வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், உடல் பருமன் மற்றும் குறைவான உடல் உழைப்பு உள்ளிட்டவற்றாலும் ஏற்படுகிறது. இந்த புற்றுநோயை தடுக்க தவறாமல் உடற்பயிற்சி செய்து, சுறுசுறுப்பான வாழ்க்கை முறை வாழ மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

3

உடற்பயிற்சி முக்கியத்துவம்

அதிக உடல் எடை பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்க முக்கிய காரணமாக கூறப்படுவதால் ஆரோக்கிய உணவு மற்றும் உடற்பயிற்சி முக்கியம்.

4

பரிசோதனை  முறைகள்

மல ரத்த பரிசோதனை (FOBT) மற்றும் கொலோனோஸ்கோபி ஆகியவை பெருங்குடல் புற்றுநோய் கண்டறிவதற்கான பரிசோதனையின் 2முறைகள்

5

உடல் செயல்பாடுகளை அதிக்ரிபு , ஆரோக்கியமான எடையை வைத்திருப்பதன் மூலமும், மது அருந்துவதைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், புகையிலையைத் தவிர்ப்பதன் மூலமும், பெருங்குடல் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கலாம் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

6

அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும்  8 பக்க விளைவுகள்.!