கலைப் பண்பாட்டு திருவிழாவில் 3D ஓவியங்கள்.. அசத்திய நாமக்கல் மாணவர்கள்.!

நாமக்கல் மாவட்ட அளவிலான கலைப் பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடைபெற்றது. போட்டியின் ஒரு பகுதியாக ஓவியப்பட்டியும் நடைபெற்றது

போட்டியில் பார்ப்பதற்கு கண்ணெதிரே நேரில் இருப்பது போன்று ஓவியங்களை வரைந்து மாணவர்கள் அசத்தினர்

9 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும் நமது பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் வாய்ப்பாட்டு இசை, கருவி இசை,

நடனம், நாடகம் , ஓவிய போட்டி ஆகிய ஐந்து பெருந்தலைப்புகளில் கலைப் பண்பாட்டு திருவிழா போட்டிகள் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் சார்பில் நடைபெற்றது

போட்டியில் நாமக்கல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்

இதில் முக்கிய சிறப்பம்சமாக இயற்கை எழில்மிகு காட்சிகள், மதுரை மீனாட்சி அம்மன், தேனிகள், சுதந்திர போராட்ட வீரர்கள், பரதத்தை எடுத்துரைக்கும் ஓவியங்கள் கார்ட்டூன் ஓவியங்கள் போன்ற

வகையான பல்வேறு ஓவியங்களை மாணவர்கள் வரைந்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். மாணவ மாணவிகள் வரைந்த ஓவியங்களை பார்த்து ஆசிரியர்கள் மதிப்பெண்களை வழங்கினர்

மல்லர் கம்பம் போட்டியில் வித்தையை காட்டிய மாணவர்கள்.!