பிரம்மிக்க வைக்கும் மேட்டூர் அணையின் வரலாறு.!

ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்குள் செல்லக்கூடிய செமயான ஒரு ஸ்பாட் மேட்டூர் அணை தான். இந்த அணையின் வரலாறு ஆச்சர்யங்கள் நிறைந்தது

மேட்டூர் அணையானது காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்டம் மேட்டூரில் 1925 ஆம் ஆண்டு துவங்கி 1934 ஆம் ஆண்டு கர்னல் W.M எல்லீஸ்சின்வடிவமைப்பின்படி நான்கரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது

இந்த அணை கட்டப்பட்ட சமயத்தில் இதுதான் உலகிலேயே உயரமான நேர்கோட்டில் அமைந்த நீர்த்தேக்கமாகும். மேட்டூர் அணை காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும்

இது சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமான மேட்டூர் என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது

இந்த அணையைக் கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் ஸ்டேன்லி நீர்த்தேக்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அணை 1934 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதை கட்டிமுடிக்க 9 ஆண்டுகள் ஆனது

இது தமிழகத்தின் மிகப்பெரிய அணையாகும். மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டி முடிக்கப்பட்டபோது, இது தான் ஆசியாவிலேயே மிக உயரமானதும் உலகிலேயே மிகப்பெரியதுமான ஏரியாக விளங்கியது

அணையின் அதிகபட்ச உயரம் மற்றும் அகலம் முறையே 214 மற்றும் 171 அடி ஆகும். அதிகபட்ச சேமிப்பு உயரம் 120 அடி ஆகும்

மேட்டூர் அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும்கிருஷ்ணா ராஜா சாகர் அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது

மேட்டூர் அணையில் 2 நீர் மின் நிலையங்கள் உள்ளன, முதல் பிரிட்டிஷ் ஆட்சியின் போதும் இரண்டாவது இந்தியக் குடியரசிலும் கட்டப்பட்டது

கோவையில் குப்பைகளால் உருவான பிரம்மாண்ட வடிவங்கள்.!