சர்க்கரை வள்ளிக் கிழங்கில் இத்தனை நன்மைகளா..? கீரைக்கு இணையான சத்து இதில் இருக்கு..!

சருமப் பாதுகாப்பு

வைட்டமின் ஏ சத்து நிறைந்த உணவுகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு முதலிடத்தில் இருக்கிறது. உங்கள் பார்வை, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 

நோய்த்தொற்று எதிர்ப்பு

 இந்த கிழங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. எல்லா வகையான நோய் தொற்றுகளையும் எதிர்த்து போராடி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

கரோட்டினாய்டு

கேரட்டுகளில் மட்டுமே கரோட்டினாய்டு இருக்கும் என்று பெரும்பாலும் அறியப்பட்டுள்ளது. ஆனால் கேரட்டில் இருப்பது போலவே சக்கரவள்ளிக்கிழங்கிலும் கரோட்டினாய்டு அதிகமாக இருக்கிறது. மேலும், இது ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த கிழங்கு வகையாகும். எனவே, செல்களில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து, உடலில் ஏற்படும் அழற்சியையும் தவிர்க்கிறது.

குறைந்த GI கொண்ட உணவு

நீரிழயு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். ஆனால், நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடக்கூடிய உணவாக சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருக்கிறது. மற்ற உணவுகளை விட இதில் குறைந்த GI இருப்பதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காது.

நார்ச்சத்து நிறைந்த கிழங்கு

கீரை வகைகளில் இருப்பதுபோல சர்க்கரைவள்ளிக்கிழங்கிலும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் மற்றும் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

உடனடி ஆற்றல் தரும்

நீண்ட நேரம் வேலை செய்பவர்களுக்கு அல்லது தீவிரமான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உடனடியாக ஆற்றல் தேவைப்படும்போது சர்க்கரை வள்ளிக்கிழங்கு இன்ஸ்டன்ட் ஆற்றல் தரும். தினமும் ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான தின்பண்டமாக சாப்பிட்டு வரலாம்.

செரிமான பிரச்சனைகளுக்குத் தீர்வு : வயிறு உப்பசம், அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றிற்கும் சக்கரவள்ளி கிழங்கு ஒரு தீர்வாக அமைகிறது.

இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க பாகற்காயை எவ்வாறு பயன்படுத்தலாம்.?