காசி, ராமேஸ்வர யாத்திரை புண்ணியம் வேண்டுமா.? புதுக்கோட்டையில் உள்ள இந்த கோயிலுக்கு வாங்க.!

புதுக்கோட்டை நகர்ப்புறத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது சாந்தநாதர் சுவாமி ஆலயம். பதினோராம் நுாற்றாண்டில் இப்பகுதியை ஆட்சி புரிந்த முதலாம் குலோத்துங்க சோழன் கட்டிய சிவன் கோயில் இது. ‘குலோத்துங்க சோழீஸ்வரம்’ என பெயர் பெற்ற இக்கோயில், பிற்காலத்தில் ‘சார்ந்தாரைக் காத்த நாயனார் கோயில்’ என மாறியது

இப்போது ‘சாந்தநாத சுவாமி’ என வழங்கப்படுகிறது. கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் இந்த சிவனை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. மேலும் சுவாமிக்கு எதிரில் ருத்ராட்ச பந்தலின் கீழ் நந்தீஸ்வரரும், நான்கு வேதங்களுக்கும் தலைவியாக விளங்கும் அம்பிகை ‘வேதநாயகி’ என்னும் பெயரில் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்

இந்த கோவில் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, சூரியன், சந்திரன், லட்சுமி சரஸ்வதி, கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானையுடன் முருகன் ,சரபேஸ்வரர்பைரவர், ஆகிய சுவாமிகளின் சன்னதிகளும் உள்ளது

முன்வினை பாவம், கிரக தோஷம் ,திருமண தடை நீங்க, கடன் பிரச்சனை தீர, சிவனுக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்து மக்கள் வழிபடுகின்றனர். காலை 6 மணிக்கு திறக்கப்டும் இத்திருக்கோவில் மதியம் 12 மணி வரையும், பின் மாலை 4:30 மணிக்குக்கு மீண்டும் திறக்கபட்டு இரவு 8 மணிக்கு நடை சாத்தப்படுகிறது

இங்கு ஆனி பிரம்மோற்சவம், ஆடிப்பூரம், சம்பக சஷ்டி, தைப்பூசம், மாசிமகத்தன்று தெப்பம், மாசி வளர்பிறை திரயோதசி திதியன்று மகா பிரதோஷ விழா சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு வந்து சுவாமியை வழிபடுபவர்களுக்கு ஒருசேர காசி ராமேஸ்வர யாத்திரை செய்த புண்ணிய பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது

மத்திய அரசின் விருதுக்கு தேர்வான‌ தஞ்சாவூர் அய்யன் குளத்தின் அழகிய புகைப்படங்கள்.!