சூரரைப்போற்று, ஜிகர்தண்டா.. மதுரையில் சூட்டிங் அதிகம் நடக்கும் யானை மலை தெரியுமா.?

மதுரை எதுக்குத்தான் ஃபேமஸ் இல்லை அப்படின்னு சொல்ற மாதிரி மதுரையில ஏராளமான ஃபேமஸான விஷயங்கள் இருந்தாலும் மதுரை எப்பவுமே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஃபேமஸ் ஆனது. ஒரு வருஷத்துல ஒரு படமாவது மதுரையில சூட்டிங் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கும்

அப்படி பல படங்களின் சூட்டிங் நடைபெற்ற ஸ்பாட்டில் ஒன்று தான் மதுரை ஒத்தக்கடை பகுதியில் இருக்கக்கூடிய யானைமலை. இந்த பகுதியில் ஒரு சிறிய குன்றுடன் கூடிய முருகன் கோவிலும் அதன் அருகிலேயே ஒரு குட்டி மண்டபம் மாதிரி இருக்கும்

இந்த இடத்தில் தான் குள்ளநரி கூட்டம் படத்தில் வரும் விழிகளிலே, விழிகளிலே பாடல் வரும். இந்தப் பாடலில் விஷ்ணு விஷால், ஹீரோயினைத் தேடுற மாதிரியான ஒரு காட்சி வரும். அந்தக் காட்சியை இந்த கோவிலில் தான் எடுத்தார்கள்

அதே மாதிரி இந்த கோவில் பக்கத்திலேயே ஒரு குட்டி ரூம் மாதிரி இருக்கும். இந்த இடத்துல தான் ஹீரோயின் ஒளிந்திருக்கும் வகையில் காட்சி. அவரை விஷ்ணு விஷால் கண்டுபிடிச்சு ஹீரோயின் கிட்ட பேசுற மாதிரியும், அதே இடத்தில் ஹீரோயின் கொடுக்கிற துணியை விஷ்ணு விஷால் போய் மாத்திட்டு வர மாதிரி காட்சி இந்த இடத்தில் தான் சூட்டிங் செய்துள்ளார்கள்

அடுத்து ஜிகர்தண்டா படத்தில் பாபி சிம்ஹா ஒரு மலைப்பகுதியில் உட்கார்ந்து பஞ்சாயத்து பண்ற மாதிரி ஒரு சீன் வரும். அந்த சீன இந்த கோவில் பகுதியில் இருக்கக்கூடிய பேக் சைடுல யானைமலை தெரியிற மாதிரி தான் ஷூட் பண்ணி இருப்பார்கள்

இதே மாதிரி இந்த யானை மலைப் பகுதியில் ஒரு பெரிய கல்குவாரி ஒன்று இருக்கும். இந்தக் கல்குவாரியில் தான் சூர்யா நடிச்ச சூரரைப்போற்று படத்துல வரக்கூடிய நிறைய காட்சிகள் எடுத்திருப்பார்கள்

இந்த படத்தில் வரக்கூடிய மண்ணு உருண்டை பாடலில் சூர்யா பொணத்தை தூக்கிட்டு மலையில் இறங்கி ஆடிக்கொண்டே வருகிற மாதிரி காட்சியும், பாடலின் இறுதியில் சூர்யா ஆடிட்டு வருவதை ஹீரோயின் பாக்குற மாதிரி காட்சியும், இந்தப் பகுதியில்தான் எடுத்திருப்பார்கள்

அதே படத்துல வெய்யோன் சில்லி பாடலில் சூர்யா தன்னோட பிரண்டோட பைக்ல வர மாதிரியும் பைக் ஸ்டாப் பண்ணிட்டு பைக்க தள்ளுற மாதிரியான காட்சியையும் இந்த கல்குவாரியில தான் எடுத்து இருப்பாங்க

அதே மாதிரி சூர்யா பிரண்ட்ஸ் கூட சேர்ந்து இருக்கிற மாதிரியான ஆகாசம் பாடலும் சூர்யா நண்பர்களுடன் சேர்ந்து குளிக்கிற மாதிரி காட்டிருப்பாங்க. அந்த பிளேஸ ஃபுல்லா இந்த கல்குவாரியில் தான் எடுத்திருப்பார்கள்

இந்த பாடல் படம்பிடிக்கும்போது இந்த கல்ப குவாரியில் தண்ணி குறைவாக இருந்திருக்கும். ஆனால் தற்போது இந்த கல்குவாரியில் தண்ணீர் நிறைய உள்ளது. இந்த யானைமலையை சுற்றி நிறைய படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது

காசி, ராமேஸ்வர யாத்திரை புண்ணியம் வேண்டுமா.? புதுக்கோட்டையில் உள்ள இந்த கோயிலுக்கு வாங்க.!