70 ரூபாய் இருந்தால் போதும் ஐரோப்பிய தெருக்களை பார்த்த ஃபீலை அனுபவிக்கலாம்.!

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் தற்போது லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.

லண்டன் பிரிட்ஜ் பொருட்காட்சி ஒட்டுமொத்த சிறப்பம்சமே, இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரில் அமைந்துள்ள பாரம்பரிய மிக்க லண்டன் பிரிட்ஜ் பாலத்தை போன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட பாலம் தான்

பொருட்காட்சிக்கு நுழைவு கட்டணம் 70 ரூபாய், நுழைவு சீட்டை பெற்று லண்டன் ஃப்ரிட்ஜ்ஜில் ஏறி உள்ளே செல்லும் வகையில் இதை வடிவமைத்துள்ளனர்

லண்டன் பாலத்தை கண்டு ரசித்து அடுத்த அரங்குக்கு சென்று பார்த்தால் அங்கு ஒரு குட்டி ஐரோப்பாவையே செட் போட்டு வைத்துள்ளனர்

இதுவரை ஆங்கில படங்களில் மட்டும் நாம் பார்த்து வந்த மேலை நாட்டு தெருக்களை கண் முன்னே கொண்டு வந்து வைக்கும் வகையில் டெலிபோன் பூத் , கடைகள் வீடுகள் என ஒவ்வொன்றையும் வடிவமைப்பு செய்துள்ளனர்

லண்டன் பிரிட்ஜ்ஜில் ஏறி லண்டன் வீதிகளில் வலம் வந்து அடுத்த அரங்குக்கு சென்றால் அங்கு பிரமாண்டமான அரண்மனையே செட் போட்டு வைத்துள்ளனர்

சின்ன நாற்காலிகளையே சிம்மாசனமாக வடிவமைப்பு செய்துள்ளது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது

இதேபோல் ராட்டினம், டோரா டோரா போல பொருட்காட்சிக்கே உரிய விளையாட்டுகளும், பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன

திருத்தங்கல் சோனி மைதானத்தில் நடைபெற்று வரும் இக்கண்காட்சி ஒரு மாதம் வரை நடைபெறும் என பொருட்காட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சங்கரன்கோவிலில் வருடத்தில் 6 நாட்கள் மட்டுமே நடக்கும் அதிசயம்.!