தஞ்சையை சேர்ந்தவர் சவித்ரு. பேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்த இவர் சிலைகள் உருவாக்குவதிலும் ஓவியம் வரைவதிலும் அதிக ஆர்வம் கொண்டு வந்துள்ளார்
இந்த நிலையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சோப்பில் பல வகையான வடிவங்களை உருவாக்கியுள்ளார். அதனை அடுத்து கற்களில் பல உருவங்களையும் சிலையாக செதுக்கி உள்ளார்
அதன் பிறகு ராஜமௌலி இயக்கிய நான் ஈ படத்தில் பென்சில் முனையில் அழகிய இதய வடிவில் உருவாக்குவது போன்ற காட்சி அமைந்திருக்கும். அந்த காட்சி இவரை வெகுவாக ஈர்த்துள்ளது
அதனை அடுத்து இவரும் பென்சில் முனையில் தற்போது வரை 400க்கும்மேற்பட்ட உருவங்களை சிலையாக செதுக்கியுள்ளார்
இதில் பறவைகளின் உருவம், விலங்குகளின் உருவம், கடவுள்களின் உருவம், சுதந்திரப் போராட்ட தியாகிகளின் உருவம், தமிழ் சினிமா மற்றும் பிறமொழி நடிகர்களின் உருவம் போன்ற பல்வேறு வகையான உருவங்களை லென்ஸ் கூட பயன்படுத்தாமல் வெறும் கண்ணால் செதுக்கி வியக்க வைத்து வருகிறார்
இது குறித்து பேசிய இளைஞர், நான் சுமார் 10 ஆண்டுகளாக சிற்பங்களை உருவாக்கி வருகிறேன். முதலில் பெரிய கோயிலை பார்த்து தான் எனக்கு சிற்பக்கலையில் ஆர்வம் வந்தது. எனக்கு அந்தந்த நேரத்தில் தோன்றுவதை சிற்பமாக்குவேன்
நாங்கள் தஞ்சையில் தேவர்'ஸ் பிரியாணி என்கிற உணவகத்தை நடத்தி வருகிறோம். என் அப்பா கடந்த ஆண்டு தவறிவிட்டார். அதனால் உணவகத்தை நான் தான் பார்த்து கொள்கிறேன்
அதனால் வேலை முடித்த பிறகு தற்போது, அவ்வப்போது சிலைகளை உருவாக்கி வருகிறேன். எனக்கு தஞ்சை பெரிய கோயிலை உருவாக்க வேண்டும் என்ற பெரும் ஆசை உள்ளது
ஆனால் கடமைக்கு இல்லாமல் கோயிலில் உள்ள எல்லா சிற்பங்களையும் செதுக்குவேன். அதற்கு 1 வருடத்திற்கு மேல் ஆகும் வரும் நாட்களில் அதை செய்ய உள்ளேன். எனக்கு இந்த சிற்பங்களை அருங்காட்சியகம் போல காட்சிப்படுத்த வேண்டும் என்ற ஆசை உள்ளது
நான் விற்பனைக்கு கேட்பவர்களிடம் மட்டுமே செய்து தருகிறேன். எனக்கு இதுவரை எந்த ஒரு அங்கிகாரமும் கிடைக்க வில்லை எனக்கும் என்ன செய்ய வேண்டும் என்ற ஐடியாவும் இல்லை. ஆனால் அரசு என்னை அங்கீகாரத்தால் மகிழ்ச்சியாக இருக்கும்
ஒரு கலைஞனுக்கு அங்கிகாரமே முக்கியம் எனவே அரசு இந்த கலையை ஊக்குவிக்க வேண்டும் எனக்கு பென்சில் முனையில் உருவாக்கிய என்னுடைய சிற்பங்களை காட்சிப்படுத்த உதவி செய்ய வேண்டும்