நீரிழிவு நோயாளிகளுக்கு  ரொட்டி செய்வது எப்படி

நீரிழிவு நோயாளிகளுக்கு  ரொட்டி செய்வது எப்படி

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய ரொட்டியை நீங்கள் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்று தெரியுமா ?

நீங்கள் சர்க்கரையால் பாதிக்கப்பட்டிருந்தீர்கள் என்றால் நீங்கள் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு உணவும், நேரடியாக உங்கள் உடலின் இன்சுலின் அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

ஸ்டேப்  1

ஒரு அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவை சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப்  2

 சோள மாவு, கேழ்வரகு மாவு ஆகிய அனைத்தையும் நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப்  3

இதை  சலித்து,கோதுமை மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக அனைத்தையும் கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப்  4

தண்ணீரை இளஞ்சூடாக்கி, மாவில் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப்  5

மாவை நன்றாக பிசைந்த பின்னர், நீங்கள் அதை ஒரு ஈரத்துணியால் மூடிவிடவேண்டும்.

ஸ்டேப்  6

சிறு, சிறு உருண்டைகளாக மாவை உருட்டி, சப்பாத்தி கட்டையில் கொஞ்சம் உலர்ந்த மாவு சேர்த்து தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப்  7

தோசைக்கல்லை சூடாக்கி, தேய்த்து வைத்துள்ள மாவை நன்றாக இருபுறமும் வாட்டி எடுக்க வேண்டும். எண்ணெய் அல்லது நெய் இருபுறமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கலோரிகள் குறைவாக உள்ள ஏதேனும் ஒரு சைட் டிஷ், வெங்காயம், வெள்ளரி, கேரட் ஆகியவற்றை சேர்த்து பரிமாற வேண்டும்.

வாழைப்பழத்தை விட அதிக பொட்டாசியம் நிறைந்த 8 உணவுகள்.!