யூரிக் ஆசிட் அளவை அதிகரிக்கும்  6 உணவுகள்.!

உடலில் புரதச் சிதைவு காரணமாக யூரிக் அமிலம் உருவாகத் தொடங்கும் போது, ​​கீல்வாதம் ஒரு நோய் உண்டாகிறது. இந்த நோயில், மூட்டுகளில் கடுமையான வலி உண்டாகும்

ஒரு சாதாரண நபருக்கு யூரிக் அமிலம் ஒரு டெசிலிட்டருக்கு 3.5 முதல் 7.2 மில்லிகிராம் வரம்பில் இருக்க வேண்டும். இந்த அளவை தாண்டினால் விவரிக்க முடியாத மூட்டு வலியை அனுபவிக்கக்கூடும்

எனவே, யூரிக் ஆசிட் அளவு அதிகம் கொண்ட நோயாளிகள் மருந்து மாத்திரைகளை காட்டிலும் உணவில் சில கட்டுப்பாடுகளை வகுத்துக்கொண்டால்தான் அதை கட்டுப்படுத்த முடியும்

இல்லையெனில் எவ்வளவு மாத்திரைகள் சாப்பிட்டும் பலனில்லை. அப்படி அதிக யூரிக் ஆசிட் உள்ளவர்கள் குறிப்பிட்ட சில உணவுகளை தவிர்த்தாலே யூரிக் ஆசிட் அளவு கட்டிப்பாட்டில் வைக்கலாம்

யூரிக் ஆசிட் அளவை அதிகரிக்கும் உணவுகள் எவை என்று தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...

சிவப்பு இறைச்சி

மாட்டுக்கறி, பன்றிக்கறி போன்ற இறைச்சி வகைகளில் அதிக பியூரின்கள் இருப்பதால் அவை உடனே யூரிக் ஆசிட் அளவை அதிகரித்துவிடும். எனவே அவற்றை சாப்பிடுவதை தவிர்த்தாலோ அல்லது குறைத்துக்கொண்டாலோ யூரிக் ஆசிட் அளவை குறைக்கலாம்

1

உறுப்புகளின் இறைச்சி

இறைச்சிகளிலேயே மூளை, நுரையீரல் என உறுப்புகளை சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் உறுப்புகளிலும் பியூரின்கள் அதிகமாக உள்ளன. எனவே அவற்றை தவிர்ப்பதும் யூரிக் ஆசிட் அளவை குறைக்க உதவும்

2

More Stories.

யூரிக் ஆசிட் அளவை சட்டுனு குறைக்கும் 5 இலைகள்..

குளுக்கோஸ் அளவை குறைக்கும் ஸ்நாக்ஸ் வகைகள்...

காலையில் துளசி இலைகளை இப்படி சாப்பிடுங்க...

சர்க்கரை பானங்கள்

சர்க்கரை நிறைந்த பானங்கள், குக்கீஸ் ஆகியவற்றில் ஃப்ரக்டோஸ் அதிகமாக உள்ளன. அவை உடலில் பியூரினை அதிகரிக்கும் என்பதால் யூரிக் ஆசிட் அளவும் அதிகரிக்கும். எனவே அவற்றை தவிர்ப்பது நல்லது

3

கடல் உணவுகள்

மீன், இறால் போன்ற கடல் உணவுகளில் பியூரின் அதிகமாக இருக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது

4

பருப்பு வகைகள்

பருப்பு வகைகளில் புரோட்டீன் மற்றும் விட்டமின்கள் நிறைவாக இருந்தாலும் அதிக யூரிக் ஆசிட் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆபத்தாக உள்ளது. ஏனெனில் இதில் அதிக பியூரின் அளவு இருப்பதால் உடனே யூரிக் ஆசிட் அளவையும் அதிகரித்துவிடும்

5

பசலைக்கீரை

பசலைக்கீரை அதிக ஊட்டச்சத்து மிக்க கீரை என்றாலும் அதில் அதிக அளவு பியூரின் இருப்பதால் யூரிக் ஆசிட் உள்ளவர்களுக்கு நல்லதல்ல

6

யூரிக் ஆசிட் அளவை சட்டென்று குறைக்கும்  5 இலைகள்.!