கோரைப்பாய்கள் எப்படி தயாரிக்கிறாங்க தெரியுமா.?

திருச்சி மாவட்டம் முசிறிக்கு அருகே அமையப்பெற்றுள்ள ஊர் தான் சந்நதப்பாளையம். காவிரி ஆற்றின் படுகைகளில் வளரும் கோரை என்னும் ஒருவகை புற்களில் இருந்து இந்த பாய் தயாரிக்கப்படுகிறது

இங்கு சாதாரண பாய்கள் முதல் பட்டு பாய்கள் வரை அனைத்து பாய்களும் தயார் செய்யப்படுகிறது. இந்த பாய் அனைவரது வீட்டிலும் நிச்சயம் இடம் பிடித்திருக்கும்

இந்த பாய்கள் இயற்கையாக விளையும் புற்களில் இருந்து தயாரிக்கப்படுவதால் உடலிற்கு குளிர்ச்சி அளிக்கிறது. ஓய்வு மற்றும் உறக்கம் ஆகிய இரண்டும் மனிதனுக்கு மிகத் தேவையானது

உறக்கத்தினால் ஐம்பொறி புலன்களின் சோர்வும், சரீர வருத்தமும் போவது மட்டுமின்றி மனமும் உற்சாகமடைகிறது. அப்படி நல்ல தூக்கத்தை தரும் இந்த கோரை பாய்களை செய்ய தேவைப்படும் புற்கள் கிழங்கு வகைகளிலிருந்து வளர்கிறது

கோரை வளர 6-7 மாதங்கள் வரை ஆகிறது. அறுவடை செய்யப்படும் கோரையானது ஒரு எந்திரம் மூலம் இரண்டாக கிழிக்கப்பட்டு கட்டுகளாக அடிக்கி வைக்கப்படுகிறது

அதனை சரியான அளவில் ஒருவர் வெட்டி அடுக்குகிறார். அதை சில பெண்கள் எடுத்து அதில் நூல் கட்டுகின்றனர். அதற்கு பிறகு எந்திரத்தின் உதவியுடன் கோரை பாயானது தயாராகிறது

அதனை முழுமையாக்க அதன் ஓரங்கள் அனைத்தும் நாடா தைத்தல் என்ற பெயரில் துணியினால் முழுவதும் வைக்கப்படுகிறது. அதற்கு பிறகு பேக்கிங் செய்யப்பட்ட பாய்களை மக்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர்

வந்தாச்சு தீபாவளி.. புதுபுது மாடலில் கலர் கலரா பட்டாசுகள்.. என்னென்ன தெரியுமா.?