நமது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் பீட்ரூட்டில் உள்ளது. ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்து, விட்டமின் சி போன்றவை பீட்ரூட்டில் நிறைந்துள்ளன. இது சரும பாதிப்பை தடுத்து, முடி உதிர்வை நிறுத்தும். பீட்ரூட் சாறு அருந்துவதால் நமது அழகுத் தோற்றமும் மேம்படும்.
1
பீட்ரூட்டில் இரும்புச்சத்து, ஃபோலேட் சத்து, விட்டமின் சி ஆகியவை நிறைவாக உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்துமே முடி வளர்ச்சியை ஊக்குவிக்க கூடியவை மற்றும் முடி உதிர்வை தடுக்கும். இது மட்டுமல்லாமல், உடலில் ஏற்படும் அனைத்து அழற்சிகளுக்கும் இது தீர்வை கொடுக்கும்.
2
நம் உடலில் உள்ள கழிவுகளை இயற்கையான சுத்திகரிக்கக் கூடிய உணவுப் பொருட்களில் பீட்ரூட்டிற்கு மிக முக்கிய பங்கு உண்டு. நச்சுக்கள் வெளியேறினால் சருமம் தெளிவானதாக காட்சியளிக்கும். இது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படும். செரிமானத் திறன் மேம்படும்.
3
உயர் ரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கக் கூடிய நபர்களுக்கு பீட்ரூட் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். தினந்தோறும் காலை பொழுதில் பீட்ரூட் சாறு அரை கிளாஸ் அளவு குடித்து வர ரத்த அழுத்தம் வெகுவிரைவில் கட்டுக்குள் வரும். இது மட்டுமல்லாமல் பீட்ரூட் நமது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்தும்.
4
பீட்ரூட் பொட்டாசியம், ஃபோலேட், ஆக்ஸிஜனேற்றிகள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவற்றின் சக்தியாக உள்ளது. முகப்பருவை எதிர்த்துப் போராடவும், வயதான அறிகுறிகளைத் தடுக்கவும், நிறத்தை பிரகாசமாக்கவும் இந்த பொருட்கள் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.
5