உங்களுக்கு இந்த பிரச்சனைகள் இருந்தால் ’கத்தரிக்காய்’ சாப்பிடக்கூடாது.!

பலருக்கு கத்தரிக்காய் விருப்பமான காயாக இருக்கும். இது தரும் சுவையையும் ஆரோக்கியத்தையும் யாராலும் மறுக்க முடியாது

கத்தரிக்காயில் விட்டமின்கள், மினரல் சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன

இருப்பினும் சில பிரச்சனை இருப்பவர்களுக்கு இது எதிர்வினையான பாதிப்புகளை தரக்கூடும். அந்த வகையில் எந்தெந்த பிரச்சனை இருப்பவர்கள் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது என்பதை தெரிந்துகொள்ள திரையை தட்டவும்...

செரிமான அமைப்பு பலவீனமாக உள்ளது அல்லது செரிமானம் மெதுவாக நடக்கும், எது சாப்பிட்டாலும் எதுக்களித்து மந்தம் தட்டும் எனில் நீங்கள் கத்தரிக்காய் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் கத்தரிக்காய் வாயுவை உருவாக்கும் என்பதால் உங்கள் செரிமானத்தை இன்னும் மோசமாக மாற்றும்

1

பலவீனமான செரிமான அமைப்பு

உங்களுக்கு சரும எரிச்சல், அரிப்பு இருப்பின் கத்தரிக்காயை தவிர்க்க வேண்டும். பொதுவாகவே உங்களுக்கு சரும அலர்ஜி எதுவாக இருந்தாலும் கத்தரிக்காய் சாப்பிடக் கூடாது என மருத்துவர்களே எச்சரிப்பார்கள். இது உங்கள் பிரச்சனையின் தீவிரத்தை கூடுதலாக அதிகரித்துவிடும் என்பதால் கவனமாக இருங்கள்

2

ஒவ்வாமை பிரச்சனை

நீங்கள் மன அழுத்தம் அல்லது மனப்பதட்டம் காரணமாக டிப்ரஷன் மாத்திரைகள் உட்கொள்கிறீர்கள் எனில் கத்தரிக்காய் சாப்பிடக்கூடாது. மீறினால் உங்கள் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். அதோடு அந்த மாத்திரையின் ஆற்றலை நீர்த்துப்போகச் செய்யும்

மன அழுத்தம்

3

உங்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இல்லை. குறைவான இரத்தமே உள்ளது எனில் இரத்த சோகை ஏற்படும். இந்நிலையில் நீங்கள் கத்தரிக்காய் அதிகமாக உட்கொள்கிறீர்கள் எனில் இரத்த உற்பத்தியை தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே இரத்த சோகை உள்ளவர்கள் கத்தரிக்காயை தவிர்ப்பது நல்லது

4

இரத்த சோகை

உங்களுக்கு கண்களை சுற்றி அரிப்பு, எரிச்சல், பார்வையில் குறைபாடு, வீக்கம் போன்ற பிரச்சனைகள் இருப்பின் கத்தரிக்காய் சாப்பிட வேண்டாம்

5

கண்களில் எரிச்சல்

உங்களுக்கு மூல நோய் இருப்பின் கத்தரிக்காய் பிரச்சனையை இன்னும் தீவிரமாக்கும். எனவே தவிர்ப்பது நல்லது

6

மூல நோய்

சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் கத்தரிக்காயை தொட்டுக்கூட பார்க்கக் கூடாது. கத்தரிக்காயில் உள்ள ஆக்ஸலேட் உங்கள் ஸ்டோன் பிரச்சனையை இன்னும் அதிகமாக்கக் கூடும்

7

சிறுநீரகத்தில் கல்

More Stories.

நீரிழிவு நோயாளிகள் தினசரி முட்டை சாப்பிடலாமா..?

மனச்சோர்வை அதிகப்படுத்தும் ஆரோக்கியமற்ற உணவுகள்...

தினமும் 5 வால்நட் சாப்பிடுங்க.. இந்த 10 பிரச்சனைகளே இருக்காது..!

இது பொதுவான தகவல், இதை ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபுணர்களின் கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள்

ஒரே ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா.?