ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்தியாவின் அட்டவணை...

இந்தியா vs ஆஸ்திரேலியா  அக்டோபர் 8

இந்தியா தனது ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக் கோப்பை 2023 போட்டியை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது

இந்தியா vs ஆப்கானிஸ்தான்  அக்டோபர் 11

இந்தியா அக்டோபர் 11-ம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் தனது இரண்டாவது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது

இந்தியா vs பாகிஸ்தான்  அக்டோபர் 14

அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பாகிஸ்தானை தனது மூன்றாவது ஆட்டத்தில் இந்தியா எதிர்கொள்கிறது

இந்தியா vs பங்களாதேஷ்  அக்டோபர் 19

உலகக் கோப்பையில் இந்தியாவின் நான்காவது ஆட்டம் வங்காளதேசத்திற்கு எதிரானது. அக்டோபர் 19 அன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது

இந்தியா vs நியூசிலாந்து  அக்டோபர் 22

தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் அக்டோபர் 22-ம் தேதி ஐந்தாவது ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா

இந்தியா vs இங்கிலாந்து  அக்டோபர் 29

இந்தியா-இங்கிலாந்து 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அக்டோபர் 29 அன்று நடைபெற உள்ளது

இந்தியா vs இலங்கை   நவம்பர் 2

நவம்பர் 2 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா இலங்கையை எதிர்கொள்கிறது

இந்தியா vs தென்னாப்பிரிக்கா  நவம்பர் 5

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் 2023 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி இந்தியா - தென்னாப்பிரிக்கா ஒருநாள் உலகக் கோப்பை போட்டி நடைபெறவுள்ளது

இந்தியா vs நெதர்லாந்து  நவம்பர் 12

2023 ஒருநாள் உலகக் கோப்பையின் இந்தியாவின் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை நவம்பர் 12 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது

தரமான தூக்கத்தைப் பெற உதவும்  9 உணவுகள்.!