மதுரையில் ஊட்டி வண்ண மலர் கண்காட்சி... ரசித்து மகிழும் குழந்தைகள்.!

மதுரை கோர்ட் ரோடு பகுதியில் இருக்கக்கூடிய காந்தி மியூசியம் மைதானத்தில் அவ்வப்பொழுது விடுமுறை தினத்தை முன்னிட்டு கண்காட்சி நடைபெறுவது வழக்கம்

இந்த நிலையில் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஊட்டி வண்ண மலர்கள் கண்காட்சி மற்றும் வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி என்ற தலைப்பில் கண்காட்சி நடைபெற்று வருகின்றது

ஊட்டி வண்ணமலர்கள் கண்காட்சி என்ற வகையில் கண்காட்சியின் நுழைவு வாயிலில் யானை, மயில், டால்பின் பறவை, ஹெலிகாப்டர் போன்ற வடிவில் மலர்களைக் கொண்டு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது

மேலும் உள்ளே சென்றால் வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி என்ற வகையில் பெண்கள் பயன்படுத்தக்கூடிய ஜிமிக்கி, வளையல் போன்ற அழகு சாதன பொருட்களும், குழந்தைகளுக்கு என்று கார்,

லாரி, மோட்டார் சைக்கிள் போன்ற விளையாட்டு பொருட்களும், வீட்டு உபயோகப் பொருட்கள் என பலவிதமான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது.

Stories

More

இனி காலாவதியான உணவு பொருட்கள் விற்றால் இதுதான் நடவடிக்கை..

போலீசார் ட்ரஸ்ஸில் இருக்கும் கேமரா எதற்கு தெரியுமா?

உலகின் இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு இதுவா?

இதனை அடுத்து குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் என்ஜாய் பண்ணக்கூடிய வகையில் வாட்டர் போட்டிங், ஜம்பிங் பவுன்ஸ், கொலம்பஸ், பெரிய பெரிய ராட்டினம் என பலவிதமான விளையாட்டு தளங்களும் உள்ளது. இதனை குழந்தைகள் மகிழ்ச்சியுடன் விளையாடினர்

மேலும் பரிசுகளை அள்ளிச் செல்லக்கூடிய வகையில் ரிங் கேம், கன் கேம், டோக்கன் கேம் என பல்வேறு வகையான விளையாட்டுகளும் போடப்பட்டிருந்தது இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் விளையாடினர்

மேலும் இந்த கண்காட்சியின் நுழைவு கட்டணமாக ரூ.50 திறப்பு நேரமாக மாலை 4:30 மணியிலிருந்து இரவு 9:30 மணி வரை அனுமதிக்கப்பட்டு வருகின்றது

திருக்குறளை எப்படி கேட்டாலும் சொல்வேன்… கோவை சிறுவனின் அசாத்திய திறமை.!