1  மாதத்திற்கு அரிசி சாப்பிடுவதை நிறுத்தினால் இத்தனை நன்மைகளா?

ஒரு மாதம் வரை அரிசி உணவை நீங்கள் உட்கொள்ளாமல் இருக்கும்போது, உடலில் கலோரிகள் குறைவதன் காரணமாக உடல் எடை குறைய வாய்ப்பு உண்டு.  

கார்போஹைட்ரேடுகள் உட்கொள்ளாத காரணத்தினால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும் என வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

அரிசிக்கு பதிலாக வேறு ஏதேனும் தானியங்களையோ அல்லது அதே அளவு கலோரிகளை தரும் வேறு ஏதேனும் கார்போஹைட்ரேடுகள் நிறைந்த உணவுப் பொருட்களையும் நீங்கள் உட்கொள்ளாமல் இருக்க வேண்டும்.

நீங்கள் அரிசி உணவை கைவிட்ட அந்த மாதத்தில் மட்டுமே ரத்தத்தில் சர்க்கரை அளவானது குறைந்திருக்கும் எனவும் அல்லது மீண்டும் அரிசி உணவை எடுத்துக் கொள்ள ஆரம்பித்ததில் இருந்து குளுக்கோஸ் அளவு அதிகரிக்க துவங்கும்

More Stories.

புற்றுநோய் செல்களுடன் போராட உதவும் அத்திப்பழம்...

100 நாட்களில் உடல் எடையை குறைக்கும் டயட் ஆரோக்கியமானதா..?

தண்ணீர் கூட அலர்ஜியை உண்டாக்குமா..?

அரிசி உணவை கைவிடுவதால் அரிசியின் மூலம் கிடைக்கும் கார்போஹைட்ரேட்டுகள் வைட்டமின் பி மற்றும் சில தாதுக்கள் ஆகியவற்றில் குறைபாடு ஏற்படலாம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

அரிசி உணவை மொத்தமாக உங்களது உணவு பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு மாதத்திற்கு அரிசி உணவை கைவிட வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும். அரிசி உணவை விரும்புபவர்கள் தங்களது உணவு கட்டுப்பாட்டில் ஒரு பகுதியாக அரிசி உணவை சேர்த்துக் கொள்ளலாம்.

அரிசி உணவுடன் புரதச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களையும், காய்கறிகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் அரிசி உணவை மிகவும் சத்து மிகுந்த உணவாக நம்மால் மாற்ற முடியும். அரிசியில் உள்ள கார்போஹைடிரேட்டுகள் தான் உடலின் சக்திக்கு அடிப்படையானவை. எனவே அவற்றை முற்றிலுமாக உணவு பட்டியலில் இருந்து நீக்குவது என்பது நம்மை பலவீனம் அடையச் செய்யும்

அதிக பால் குடிப்பதால் ஏற்படும் 8  பக்க விளைவுகள்.!