போலீசார் ட்ரஸ்ஸில் இருக்கும் கேமரா எதற்கு தெரியுமா.?

கோவை மாநகரில் போலீசாருக்கு 'பாடி வார்ன்' என்று அழைக்கப்படக் கூடிய உடையில் மாட்டும் கேமிராக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கோவையில் ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் 4 கேமிராக்கள் வழங்கப்பட்டுள்ளன

இது தவிர போக்குவரத்து காவலர்களும் இந்த கேமிராக்களை அணிந்தபடி போக்குவரத்து காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுவாக ஒரு இடத்தில் கேமிரா பொருத்தப்பட்டும் போது, அங்கு தவறுகள் மற்றும் குற்ற சம்பங்கள் தடுக்கப்படுகிறது

இதன் அடிப்படையிலேயே போலீசாருக்கு இவ்வகை கேமிராக்களை காவல்துறை வழங்கி வருகிறது. காவல் கட்டுப்பாட்டு அறையுடனும், காவல் அதிகாரியின் செல்போனிலும் இந்த கேமிராக்கள் இணைக்கப்பட்டுள்ளன

போலீசார் ரோந்து பணிகள், பாதுகாப்பு பணிகள் மற்றும் வாகன தணிக்கை மேற்கொள்ளும் போது இந்த கேமிராவில் பதிவாகும் காட்சிகளை நேரடியாக காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியும், மொபைல் மூலமாகவும் பார்க்க முடியும்

இதன் மூலம் அதிகாரிகள் இருந்த இடத்தில் இருந்தவாறே சம்பவ இடத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்த்து சூழல் நிலைக்கு ஏற்ப காவலர்களுக்கு கட்டளைகளை வழங்க முடியும். இவ்வகை கேமிராக்கள் காவலர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன

Stories

More

மதுரையின் டாப் 3 டூரிஸ்ட் ஸ்பாட் இதோ..!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இந்த அவலநிலையா..!

12 ஜோதிர் லிங்கங்களும் ஒரே இடத்தில்..!

இந்த கேமிரா போலீசாரின் சீருடையில் எளிதாகப் பொறுத்தும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஒரு முறை சார்ஜ் செய்தால் அடுத்த 8 மணி நேரம் தொடர்ச்சியாக இதில் வீடியோ பதிவு செய்ய முடியும். இதில் பதிவு செய்யப்படும் காட்சிகள் அடுத்த ஒரு மாதத்திற்கு கேமிராவிலேயே சேமிக்க முடியும்

முக்கியமான பதிவுகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறே சேமித்து வைத்துக் கொள்ளவும் முடிகிறது. எனவே குற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை போலீசாரால் சுலபமாக பார்க்க முடியும். இதே போல் கைதிகளை வழிக்காவல் எடுத்துச் செல்லும் காவலர்களின் பாதுகாப்பு மற்றும் கைதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்கும் விதமாகவும் இந்த கேமிராக்கள் பயன்படுத்தப்படுகின்றன

அனைத்திற்கும் மேலாக இந்த கேமிராக்கள் மூலமாக போலீசார் பொதுமக்களை கனிவுடன் நடத்துவதையும், அவர்கள் லஞ்சம் வாங்குவதை தடுப்பதையும் உறுதி செய்ய முடிகிறது

புதுக்கோட்டை கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயிலில் இத்தனை சிறப்புகளா.?