இரவு உணவுக்கு பிறகு இந்த உணவுகளை சாப்பிடாதீங்க .!

காலை அல்லது மதியம் சாப்பிடுவதை போல இரவில் தயிர் சாப்பிட கூடாது என நம் வீட்டு பெரியவர்கள் நம்மை எச்சரிப்பதை அடிக்கடி கேட்டிருப்போம். அவர்கள் சொல்வது உண்மை தான். இரவில் தயிர் சாப்பிடுவது ஆயுர்வேதத்தால் பரிந்துரைக்கப்படவில்லை.

1

தயிர்

ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, கோதுமையைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் எந்தவொரு உணவையும் இரவில் தவிர்க்க வேண்டும், ஏனெனில் நம் உடல் அதை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும்.

2

கோதுமை

இரவு நேரத்தில் ஒருவர் பச்சையாக காய்கறிகள் அல்லது பழங்களை கொண்டு சாலட்டுகளை தயார் செய்து சாப்பிடுவது செரிமான சிக்கல்களை ஏற்படுத்தும். 

3

பச்சை காய்கறிகள் 

More Stories.

புற்றுநோய் செல்களுடன் போராட உதவும் அத்திப்பழம்...

100 நாட்களில் உடல் எடையை குறைக்கும் டயட் ஆரோக்கியமானதா..?

தண்ணீர் கூட அலர்ஜியை உண்டாக்குமா..?

4

மைதா

மைதாவால் செய்யப்பட்ட உணவுகளை இரவில் சாப்பிட கூடாது என பரிந்துரைக்கிறார்கள் ஆயுர்வேத நிபுணர்கள். குறிப்பாக மைதாவில் நார்ச்சத்து இல்லாததால் ஸ்வீட் பாய்சன் என குறிப்பிடப்படுகிறது

5

உப்பு 

இரவில் அதிக சோடியம் உள்ள உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இரவு 7 மணிக்குப் பிறகு உணவில் அதிக உப்பைத் தொடர்ந்து சாப்பிடுவதால், நம் இதயம் மற்றும் ரத்த நாளங்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுகிறது.

அதிக பால் குடிப்பதால் ஏற்படும் 8  பக்க விளைவுகள்.!