வீட்டுத் தோட்டத்தில் உள்ள தாவர பூச்சிகளை அகற்ற 6 இயற்கை வழிகள்.!

உப்பு ஸ்ப்ரே

தண்ணீரில் கலந்த உப்பு ஒரு ஸ்ப்ரே பூச்சிகளை அகற்ற உதவுவது மட்டுமல்லாமல் சல்பர், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்களை தாவரங்கள் உறிஞ்சுவதற்கும் உதவுகிறது

01

வினிகர் ஸ்ப்ரே

தண்ணீர் கலந்த வினிகர் கலவையை தோட்டத்தில் உள்ள செடிகளின் மீது தெளித்தால் பூச்சிகளை அழித்துவிடும்

02

சோப்பு ஸ்ப்ரே

இரண்டு டீஸ்பூன் திரவ சோப்பை 100 மில்லி தண்ணீரில் கலந்து சோப் ஸ்ப்ரே தயாரித்து பூச்சிகளை அகற்ற மாலையில் பாதிக்கப்பட்ட செடிகளில் தெளிக்கவும்

03

பூண்டு மற்றும் வெங்காய ஸ்ப்ரே

பூண்டு மற்றும் வெங்காயத்தை அரைத்து அதன் சாற்றை வடிகட்டி 100 மில்லி தண்ணீரில் கலந்து இரவு முழுவதும் வைத்துவிட்டு அடுத்தநாள் பூச்சிகளை அகற்ற செடிகள் முழுவதும் தெளிக்கவும்

04

மிளகு ஸ்ப்ரே

ஒரு தேக்கரண்டி திரவ சோப்பு மற்றும் 100 மில்லி தண்ணீரில் இரண்டு தேக்கரண்டி மிளகு தூள் கலந்து பாதிக்கப்பட்ட செடிகளில் தெளித்து தாவர பூச்சிகளை அகற்றவும்

05

More Stories.

ஆமணக்கு செடிகளால் வலி முதல் பரு வரை நிவாரணம் பெறலாம்... 

முருங்கை இலை நன்மைகளை பற்றி தெரியுமா..?

கீரையை பச்சையாக சாப்பிடுவது நல்லதா..?

வேப்ப எண்ணெய் ஸ்ப்ரே

இரண்டு ஸ்பூன் வேப்ப எண்ணையை 100 மிலி தண்ணீர் மற்றும் ஒரு ஸ்பூன் திரவ சோப்புடன் கலந்து அதை நன்கு குலுக்கி பாதிக்கப்பட்ட தாவர பகுதிகளில் தெளிக்கவும். இது தாவர பூச்சிகளை அகற்றவும்

06

முருங்கைக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்.!