ஏக்கருக்கு ரூ.1.5 லட்சம் லாபம்.. 35 ஆண்டுகளாக வாழை சாகுபடி செய்யும் திருவாரூர் விவசாயிகள்.!

தமிழர் வாழ்வியலில் வாழை பல்வேறு முக்கியமான சிறப்புகளை பெற்றுள்ளது. பொதுவாக சுப காரியங்கள்போது வரவேற்பு வாயில்களில் வாழை மரங்கள் கட்டுவது,

வாழை இலையில் விருந்து உபசரிப்பது, முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழத்தை இறைவழிபாடு கொள்வது என அனைத்தும் தமிழரின் பண்பாடாக அமைந்துள்ளது

வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் பயன்படக்கூடியவையாக உள்ளது. அந்த வகையில் வாழை இலை, வாழை மொட்டு, வாழை காய், வாழைப்பழம், வாழை நார், வாழைத்தண்டு, வாழைமரம் என அனைத்தையும் நாம் பயன்படுத்துகிறோம்‌

இவ்வகையாக மக்களின் அனைத்து பயன்பாட்டிற்கும் உரிய வாழை மரங்களை திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் இனாம் கிளியூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலாக வாழை சாகுபடி செய்து வருகின்றனர்

வாழை சாகுபடி முறை குறித்தும், வாழை சாகுபடியில் லாபம் ஈட்டுதல் குறித்தும் வாழை விவசாயிகள் கூறுகையில், "நிலத்தில் தொழு உரங்கள் இடப்பட்டு சமன் செய்யப்பட்ட பிறகு ஒரு ஏக்கர் ஒன்றிற்கு நிலத்தில் 1,200 முதல் 1,300 வாழை கன்றுகள்

நடவு செய்யப்பட்டு முதல் 90 நாட்களுக்கு தண்ணீர் மட்டுமே வழங்கப்பட்டு 90 நாட்களுக்குப் பிறகு நுண்ணூட்ட உரங்கள் வைக்கப்பட்டு கலை வெட்டுதல் உள்ளிட்ட பணிகளில் நடைபெறும்

ஒன்பது மாதங்களில் வாழை முழுவதுமாக வளர்ந்து வாழைத்தார்கள் காய்க்க தொடங்கும். வாழைத்தார்கள் 60 நாட்களுக்கு பிறகு வெட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது

மேலும் 3 மாத காலங்களுக்கு தண்ணீர் பாய்ந்து வாழை இலைக்காக மரம் வளர்க்கப்படும். மேலும் ஒரு ஆண்டு காலத்திற்கு வாழை இலைகள் மரங்களில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படும்

ஒரு ஆண்டிற்கு ஏக்கர் ஒன்றிற்கு 1 லட்சம் ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்ட முடியும்" எனத் தெரிவித்தார்

கூடலூரில் குரு மிளகு சாகுபடி எப்படி செய்கிறார்கள் என்று தெரியுமா.?