சோயா பால் கேல்சியம் நிறைந்தது மட்டுமல்லாமல் வைட்டமின் D சத்துக்களைக் கொண்டதால் இவை பாலிற்கு சிறந்த மாற்றாகும்
சியா விதைகளில் பல விதமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. குறிப்பாக அவற்றில் கேல்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் மிகுதியாக உள்ளது
1 கப் பாதாமில் 385mg கேல்சியம் உள்ளது. நீங்கள் தினமும் 1 கப் பாதாம் சாப்பிடும் பட்சத்தில் அந்நாளிற்கு தேவையான கால்சியம் சதவிகிதத்தில் கால் பாகம் நிறைவு பெற்று விடும்
ப்ரொக்கோலியில் கிட்டத்தட்ட எள்ளிற்கு சமமான அளவில் கால்சியம் சத்துள்ளது. 1 கப் ப்ரொக்கோலியில் சுமார் 87 mg அளவு கேல்சியம் உள்ளது
சோயா பீன்ஸைக் கொண்டு தயாரிக்கப்படும் டோஃபு கேல்சியம் சத்து நிறைந்தது மட்டுமல்லாது பன்னீருக்கு சிறந்த மாற்றாகும்
கேல் என்ற கீரை வகை கலோரி குறைவானது மட்டுமல்லாது கால்சியத்தின் சிறந்த மூலமாகும்
கன்னெலின்னி அல்லது நேவி என்றழைக்கப்படும் வெள்ளை பீன்ஸ் புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்தது மட்டுமல்லாது நிறைவான அளவில் கேல்சியம் சத்து கொண்டது
1 கப் சூரியகாந்தி விதையில் சுமார் 109mg அளவு கேல்சியம் உள்ளது . மேலும் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளதால் நரம்புகளை ஒழுங்குபடுத்துவது மட்டுமல்லாது தசைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
வெறும் 1 டேபிள் ஸ்பூன் எள் விதைகளை ஒருவர் சாப்பிடும் பட்சத்தில் சுமார் 88mg அளவு கேல்சியம் சத்து கிடைத்துவிடுகிறது
ஒரு முழு சர்க்கரைவள்ளி கிழங்கில் சுமார் 68mg கேல்சியம் உள்ளது. மேலும் பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் சி நிறைவாக காணப்படுகிறது