தலைமுடி நரைத்தல் என்பது மக்களிடையே அதிகரித்து வரும் கவலைகளில் ஒன்றாகும். இதன் காரணமாக பல கெமிக்கல்கள் நிறைந்த ஹேர் கலர்களை நாட வேண்டியுள்ளது
ஆனால் இயற்கையான முறையில் உங்கள் கூந்தலின் நிரத்தை மீட்டெடுக்க உதவும் சில உணவுகள் உள்ளன எனச் சொன்னால் நம்ப முடிகிறதா? அவை என்னென்ன என்று சிலவற்றை இப்பதிவில் பார்க்கலாம்
கீரை மயிர்க்கால்களுக்கு உகந்த ஆக்ஸிஜன் விநியோகத்தை உறுதி செய்கிறது. இது முடியின் நிறத்தை பராமரிக்கவும், முன்கூட்டியே நரைப்பதை தடுக்கவும் உதவுகிறது
பயோட்டின் நிறைந்த அக்ரூட் பருப்புகள் முடி திசுக்களை வலுவாக்கி முடியின் இயற்கையான நிறத்தை பராமரிக்க உதவுகிறது
ஆம்லா என்றழைக்கப்படும் நெல்லிக்காயில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து முடியின் இயற்கையான நிறமியை அதிகரிப்பதன் மூலம் முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது
இரும்பு மற்றும் ஜிங்க் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் எள் விதைகளின் மெலனின் உற்பத்தியில் பங்கு வகிக்கின்றது. அவை முடியின் நிறத்தை பராமரிக்க பங்களிக்கின்றன
இந்த நீல-பச்சை பாசியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் உயிர்ச்சக்தியையும் ஆதரிக்கிறது
கறிவேப்பிலையில் ஆன்டி - ஆக்ஸிடண்ட் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. இது மயிர்க்கால்களுக்கு ஊட்டமளித்து நரைமுடியை மெதுவாக்கும்
இந்த விதைகள் இரும்பு மற்றும் காப்பர் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். இது முடி நிறத்திற்கு காரணமான நிறமியான மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கும்
இதில் ஏராளமாக உள்ள பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ ஆக மாறி உச்சந்தலையில் ஆரோக்கியமான சரும உற்பத்தியை ஆதரிக்கிறது, இவை பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை ஊக்குவிக்கிறது
பாதாமில் பயோட்டின் நிறைந்துள்ளதால் அவை கெரடின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தலைமுடியின் இயற்கையான நிறத்தை பராமரிக்க உதவுகிறது
பீட்டா கரோட்டின் நிரம்பிய கேரட் முடியின் ஆரோக்கியத்தை ஊக்குவித்து தலைமுடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்கிறது