உங்கள் டயட்டில் பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரோட்டீன்கள் சேர்ப்பது தலைமுடிக்கு வைட்டமின்கள் மற்றும் மினரல்களை கொடுக்கும்.
1
தலைமுடியில் அதிகப்படியான வெப்பத்தை வெளியிடும் ஸ்ட்ரெய்ட்னர்கள், கர்லிங் அயர்ன்கள், ப்ளோ டிரையர்கள் முடியை சேதப்படுத்தும்.
2
தலைமுடியை அதிக அழுத்தம் கொண்டு சீவுவதை முற்றிலுமாக தவிர்க்கவும், குறிப்பாக தலைமுடி ஈரமாக இருக்கும் பொழுது அதில் சீப்பு பயன்படுத்தக் கூடாது.
3
ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு ஒரு முறை உங்கள் முடியை ட்ரிம் செய்வது அதனை ஆரோக்கியமாக மட்டுமல்லாமல், முடி உதிர்வையும் தவிர்க்க உதவும்.
4
UV கதிர்கள் தலைமுடியை வலுவிழக்கச் செய்து உடைந்து விடும், வெளியே செல்லும் பொழுது தொப்பி அணிவது அல்லது ஹேர் ப்ராடக்டுகளை பயன்படுத்துவது அவசியம்.
5
சல்பேட் இல்லாத ஷாம்பூக்களை பயன்படுத்துவது உங்கள் தலைமுடிக்கும் மயிர்க்கால்களுக்கும் நல்லது.
6
வாரத்தில் ஒரு முறையாவது தலைமுடிக்கு கண்டிஷனர் பயன்படுத்துவது தலைமுடிக்கு தேவையான ஈரப்பதம், போஷாக்கு அளித்து அதனை வலிமையாக மாற்றுவதன் மூலமாக உடைவதை தடுக்கும்
7
இறுக்கமான போனிடைல்கள், பின்னல்கள் பன் போன்றவற்றை அணிவது தலைமுடிக்கு அதிக அழுத்தத்தை கொடுத்து உடைக்கக்கூடும், லூசான ஹேர் ஸ்டைல்கள் அல்லது முடியை சேதப்படுத்தாத ஹேர் ஸ்டைல்களை பின்பற்றவும்..
8
கலரிங், பர்மிங் அல்லது ரிலாக்ஸிங் போன்ற கெமிக்கல் டிரீட்மென்ட்கள் உங்கள் முடியை வலுவிழக்கச் செய்யலாம் ஆகவே இதை தவிர்த்து, இயற்கையான முறையில் தலைமுடியை அழகாக்க முயற்சி செய்யுங்கள்.
9
தினமும் சரியான அளவு தண்ணீர் அருந்துவது உங்கள் உடல் மற்றும் தலைமுடிக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்கி தலைமுடி வறண்டு போவதையும், உடைந்து போவதையும் தடுக்க உதவும்.
10