வீட்டில் பல்லித் தொல்லை தாங்கமுடியலையா... விரட்டுவது எப்படி.?

Scribbled Underline

காஃபி பொடியைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளுங்கள். பல்லி எங்கெல்லாம் செல்கிறதோ அங்கு அந்த உருண்டைகளை வைத்தால் பல்லி அதைச் சாப்பிட்டு இறந்துவிடும். இல்லையெனில் வீட்டிற்குள் வராமல் ஓடிவிடும்

காஃபி பொடி

1

மயில் பல்லியை உண்ணக் கூடியது. எனவே மயில் தோகையை பல்லி வரும் இடங்களில் வைத்தால் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்

மயில் இறகுகள்

2

பல்லி வரும் இடங்கள், தங்கும் இடங்களில் முட்டை ஓட்டை வைத்தால் பல்லி வரவே வராது. பல்லியும் முட்டையிடும் வகையைச் சேர்ந்ததால் , பெரிய முட்டை ஓட்டைப் பார்த்ததும் நம்மை விடப் பெரிய உயிரினம் இருக்கிறது என ஏமாந்து ஓடிவிடும்

முட்டை ஓடுகள்

3

பூண்டின் வாசனை பல்லிகளுக்குப் பிடிக்காது. பூண்டை பல்லி சுற்றும் இடங்களில் வையுங்கள். அது அடிக்கடி தங்கும் இடத்தில் குறைந்த அளவு பூண்டு பற்களைக் குவித்து வையுங்கள். இல்லையெனில் பூண்டுப் பற்களை அரைத்து அதன் நீரை தெளியுங்கள்

பூண்டு

4

வெங்காயத்தை கதவு , ஜன்னல், நுழைவு வாயில் ஆகிய இடங்களில் மாட்டி வையுங்கள். பல்லி தங்கும் இடத்தில் வெங்காயத் துண்டுகளை நறுக்கி வைத்தால் பல்லித் தொல்லை குறையும்

வெங்காயம்

5

இது பொதுவாக பலரின் வீடுகளில் பயன்படுத்தக் கூடியதுதான். பீரோக்களில் வாசனைக்காக வைக்கப்படும். இது வாசனைக்கு மட்டுமல்ல பல்லியின் தொந்தரவை போக்கவும் உதவும். பல்லி வரும் இடங்களில் இதை வையுங்கள்

இரசக் கற்பூரம்

6

பல்லிக்கு மிளகின் வாசனை மற்றும் அதன் காரத்தன்மை முற்றிலும் ஒத்துக்கொள்ளாது. மிளகைத் தண்ணீரில் நன்கு ஊற வைத்து மிக்ஸியின் மைய அரைத்து அதன் நீரை மட்டும் வடிகட்டி அதை வீட்டுச் சுவர்களில் ஸ்பிரே செய்தால் பல்லி வீட்டை விட்டு ஓடிவிடும்

மிளகு ஸ்ப்ரே

7

தொண்டை வலி பாடாய் படுத்துதா..?

குழந்தைகளுக்கும் கீழ்வாதம் வருமா..?

கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள்

More Stories.

குளிர்ச்சியான நீரை பல்லியைப் பார்க்கும் போதெல்லாம் அதன் மீது ஸ்பிரெ செய்தால் அது தெறித்து ஓடும்

குளிர்ச்சியான நீர்

8

பல்லிகள் வெப்பமான வெப்பநிலையைத் தேடுவதால் உங்கள் அறை மற்றும் வீட்டின் வெப்பநிலை குறைவாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

அறை வெப்பநிலையை குறைக்கவும்

9

இது பொதுவாக ஈ தொந்தரவு, வண்டு போன்ற பறக்கும் பூச்சிகளைப் பிடிக்க வீட்டில் கட்டி வைப்பார்கள். இது பல்லியின் அட்டகாசத்தை ஒழித்துக்கட்டவும் உதவும். சுவரில் இதை ஒட்டி வைத்தால் பல்லி அந்தப் பேப்பரில் அப்படியே ஒட்டிக் கொள்ளும்

ஃபிளை பேப்பர்

10

கொசுக்களை வீட்டிலிருந்து விலக்கி வைக்கும் 6 செடிகள்.!