100 ஆண்டுகள் பழமையான  நரசிங்கப்பெருமாள் கோயில்... எங்கு உள்ளது தெரியுமா.?

இயற்கை எழில் சூழ்ந்த நீர் வற்றாத புளியஞ்சோலை நீரோடையானது திருச்சி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்று. புளியஞ்சோலை நீரோடையை சுற்றிலும் பல ஆன்மீக தளங்கள் உள்ளது

மாசி பெரியண்ணன் கோயில், தாயம்மாள் கோயில், குருவாயி அம்மன் கோயில், அய்யப்பன் கோயில் ஆகியன பெரும்பாலானோர் அறிந்ததே

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே பச்சப்பெருமாள் பட்டியிலிருந்து கோம்பை செல்லும் வழியில் பிள்ளார்ப்பாளையத்தில் அமைந்துள்ளது. இங்கு தான் 100 வருடங்களுக்கு பழமையான நரசிங்ப்பெருமாள் கோயில் உள்ளது

இந்த கோயிலுக்குள் நுழையும் முன்பு, பக்தர்கள் கால்களைக் கழுவி விட்டு உள்ளே செல்கின்றனர். அதன் பிறகு பூஜை பொருட்களுடன் சென்று நரசிங்கப்பெருமாளை தரிசித்து செல்கின்றனர்

இங்கு திருநீர் வழங்கப்படுவதில்லை. குங்குமம், மஞ்சள் கொடுக்கப்படுகிறது. இந்த கோயிலுக்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது

புது வாகனங்கள் வாங்க, புது தொழில் தொடங்க, திருமண தடைகள் நீங்கதீய சக்தியினால் ஏற்படும் பிரச்சனைகள் விலகிட, குழந்தை யாக்கியம் கிடைத்திட, 

'V' என்ற எழுத்தில் பெயர் தொடங்குகிறதா..?

காணாமல் போன ஸ்மார்ட் போனை கண்டுபிடிப்பது எப்படி.?

1700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை  கண்டுபிடிப்பு...

More Stories.

சகல தோசங்களும் விலகிட இந்த கோயிலில் சனிக்கிழமைகளில் செய்யப்படும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்றால் அவையாவும் சரி ஆகும் என்று நம்பப்படுகிறது.

பால் பூஜை நேரம் மதியம் 2.00 மணி முதல் 2.30 மணிக்குளும், பூஜை நேரம் மதியம் 3.00 மணி முதல் 3.30 மணி வரையும், அதற்கு பிறகு மாலை 6.00 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்

குறிப்பாக, சனிக்கிழமைகளில் இரவு 10 மணி வரை நடைத்திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் கோயிலில் அன்னதானம் வழங்கப்படுகிறது