ஊட்டியில் சுற்றிப் பார்த்து ரசிக்க வேண்டிய  11 அழகான இடங்கள்.!

தமிழ்நாட்டில் மலைச்சுற்றுலா என்றால் முதலில் நினைவுக்கு வருவது ஊட்டி. இங்கே சுற்றுலா செல்வதை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்றே சொல்லலாம்

ஊட்டி

இயற்கையின் அழகும், பசுமை நிறைந்த புல்வெளிகளும், தூய்மையாக சில்லென்று வீசும் காற்றும், வருடிச் செல்லும் மேகங்களும், மேகம் தவழும் மலை முகடுகளும் என ஒரு சொர்க்கம்போல் அமைந்துள்ள இடமாகும்

சுற்றுலா தலங்கள்

இங்கே சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. அப்படி நீங்கள் ஊட்டியில் சுற்றிப் பார்த்து ரசிக்க வேண்டிய 10 முக்கிய சுற்றுலா தலங்கள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...

10 அழகான இடங்கள்

இது சுமார் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை உள்ளடக்கிய ஐந்து மாடிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இடமாகும். இங்கே 20,000 க்கும் மேற்பட்ட வகையான ரோஜாக்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது

ரோஸ் கார்டன்

1

சுமார் 55மீ உயரத்திலிருந்து சலசலத்துக் கொட்டும் அருவி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவந்திழுக்கிறது. இங்கே குளிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை

பைகாரா நீர்வீழ்ச்சி 

2

பைக்காரா ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கிறது பைக்காரா அணை. ஏரியின் அமைதியான நீரில் படகு சவாரி செய்து மகிழலாம். இந்த பயணம் மலைகளுக்கு நடுவே பயணம் செய்வதைப் போன்ற அனுபவத்தைக் கொடுக்கும்

பைக்காரா படகு சவாரி

3

இங்குள்ள புல்வெளியும், வண்ண வண்ண மலர்களும், மூலிகைகளும், க்யூட்டான போன்சாய்ஸ் மரங்களும், உயர்ந்து வளர்ந்து நிற்கும் நெடிய மரங்களும் உங்களை மெய் சிலிர்க்க வைக்கும்

அரசு தாவரவியல் பூங்கா

4

இந்த இடத்திற்கு செல்லும் சாலை வளைபுகளில் இருந்து பார்த்தால் அற்புதமான, அழகிய காட்சிகள் உங்களை வியப்பில் ஆழ்த்தும். அவலாஞ்சி குன்றின் மீதிருந்து பார்க்கும்போது அங்கு ஓடும் ஆறுகளும், பள்ளத்தாக்கின் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்

அவலாஞ்சி

5

2,623 மீ உயரத்தில் அமைந்துள்ள இது தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரங்களில் ஒன்றாகும். இங்கிருந்து வசீகரிக்கும் பள்ளத்தாக்குகளை கண்டு ரசிக்க தொலைநோக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கே மேகங்கள் உங்களை தொட்டு விளையாடும் அழகை ரசிக்கலாம்

தொட்டபெட்டா

6

அமைதியாக அமர்ந்து இயற்கையின் அழகில் மயங்கி இன்பம் காண ஏற்ற இடமாகும். இங்கிருந்து சூரிய உதயத்தையும், அஸ்தமனம்த்தையும் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும், பிரமிக்க வைப்பதாகவும் இருக்கும்

எமரால்டு ஏரி

7

இங்குள்ள புல்வெளியும், பூத்துக்குலுங்கும் மலர்களும் ஆனந்தத்தை அள்ளிதரும். குழந்தைகள் விளையாடி மகிழ ஏற்ற இடமாகும். இதன் அருகிலேயே செயின்ட் தாமஸ் சர்ச், நிலையத்திலிருந்து ஊர்ந்து செல்லும் மலை ரயில், படகு சவாரி, குதிரை சவாரி போன்றவை உள்ளன

சில்ட்ரன்ஸ் பார்க்

8

ஊட்டியில் சில அழகான தேயிலை தோட்டங்கள் உள்ளன. தேயிலை தொழிற்சாலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு தேயிலை பறிப்பது முதல் பதப்படுத்துதல் வரை எப்படி தேயிலை தயாரிக்கப்படுகிறது என்பதை விளக்குவார்கள்

தேயிலை தோட்டம்

9

65 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த ஏரியில் படகு சவாரி செய்வது அலாதியான இன்பத்தை கொடுக்கும். அருகில் இருக்கும் மினி ரயிலில் குழந்தைகள் சவாரி செய்து மகிழலாம். பொழுதுபோக்கு பூங்காவில் விளையாடி களிக்கலாம்

ஊட்டி ஏரி

10

யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ள நீலகிரி மலை ரயில், மலைவாசஸ்தலத்தின் அழகை ஆராய்வதற்கான சரியான வழியாகும். மலையோர கிராமங்களை ஆராய இது சரியான வாய்ப்பு

ஊட்டி மலை ரயில்

11

next

தொட்டியில் மா மரம் வளர்ப்பது எப்படி.?