ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் 11 உணவுகள்.!

ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் பல விஷயங்கள் உள்ளன. பலவீனமான வலி சில நேரங்களில் குமட்டல், தலைசுற்றல் மற்றும் ஒளி மற்றும் ஒலிக்கு சத்தம் மண்டைக்குள் கேட்கும்

இதுபோன்ற அறிகுறிகளுடன் நீங்கள் நீண்ட காலமாக ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டு வருகிறீர்கள் எனில் சில உணவுகள் உங்கள் தலைவலியை தூண்டும்

அந்தவகையில் உங்களுக்கு ஒற்றை தலைவலி இருந்தால் நீங்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவுகள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...

சீஸ்

ஆய்வின்படி, ஒற்றைத் தலைவலி கொண்டவர்களில் 35% க்கும் அதிகமானோர்க்கு சீஸ் உண்ணும் பழக்கம் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களுக்கும் ஒற்றை தலைவலியின் தூண்டுதலுக்கும் சீஸ் முக்கிய பங்கு வகிப்பதை கண்டறிந்துள்ளனர்

1

காஃபின்

அதிகப்படியான காஃபின் நுகர்வானது மூளையின் இரத்த நாளங்களில் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் காஃபின் நுகர்வை திடீரென் நிறுத்தும் போது ஏற்படும் அறிகுறிகள் ஒற்றை தலைவலியை தூண்டும்

2

புளித்த உணவுகள்

பனீர், சோயா சாஸ், கிம்ச்சி மற்றும் சார்க்ராட் (sauerkraut) போன்ற புளித்த உணவுகளில் அதிக டைரமைன் உள்ளது. இவை ஒத்துகொள்ளவில்லை என்றால் அது ஒற்றைதலைவலி ஏற்பட வழிவகுக்கும்

3

செயற்கை இனிப்புகள்

Aspartame மற்றும் சுக்ரோலோஸ் ஆகியவை தலைவலி & ஒற்றைத் தலைவலியுடன் தொடர்புடைய கெமிக்கல் ஸ்வீட்னர்ஸ் ஆகும். அதிக அளவில் இவற்றை எடுத்து கொள்ளும் நபர்களுக்கு இவை தலைவலியை ஏற்படுத்த கூடும்

4

ஆல்கஹால்

குறிப்பாக ரெட் ஒயின் மற்றும் பீர் ஆகியவற்றில் ஹிஸ்டமைன் மற்றும் டைரமைன் உள்ளன. இவை தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது

5

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

நிறம் மற்றும் சுவையைப் பாதுகாக்கும் நைட்ரேட்டுகள் உள்ள இந்த உணவுகள் நைட்ரிக் ஆக்சைடை இரத்தத்தில் வெளியிடுகின்றன. இது மூளையில் உள்ள இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்யும் என்று ஹெல்த்லைன் ஆய்வு கூறுகிறது

6

ஏஜ்ட் சீஸஸ் (Aged Cheese)

ஏஜ்ட் சீஸில் இயற்கையாகவே உருவாகும் சேர்மமான டைரமைன் நிறைந்தது. இதனால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு இது ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும்

7

சாக்லேட்

சாக்லேட்களில் காஃபின் மற்றும் பீட்டா-ஃபீனைல்எதிலமைன் (beta-phenylethylamine) ஆகிய இரண்டும் உள்ளன, இவை சென்சிட்டிவான நபர்களுக்கு ஒற்றை தலைவலியை தூண்டக்கூடிய சேர்மங்கள் ஆகும்

8

மோனோசோடியம் குளுட்டமேட் (MSG) உள்ள உணவுகள்

MSG என்பது குளுட்டமிக் அமிலத்தின் சோடியம் உப்பு. இது சில உணவுகளில் சேர்க்கப்படுகிறது. அமெரிக்கன் மைக்ரேன் அறக்கட்டளையின் படி, MSG கடுமையான ஒற்றைத் தலைவலியை தூண்டலாம் என கணித்துள்ளது

9

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் உள்ள இயற்கை அமிலங்கள் மற்றும் சேர்மங்கள் சிலருக்கு ஒற்றைத் தலைவலியைத் தூண்ட கூடும். ஆனால் சிட்ரஸ் பழங்கள் வெகு சிலருக்கே மைக்ரேன் பாதிப்பை ஏற்படுத்த கூடும்

10

உப்பு நிறைந்த உணவுகள்

குறிப்பாக பதப்படுத்தப்பட்ட மற்றும் தொகுக்கப்பட்ட சிற்றுண்டிகளில் உள்ள அதிகப்படியான சோடியம் நீரிழப்பு மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கும்

11

next

அரிசி மற்றும் சப்பாத்தியைக் நிறுத்துவதால் உடலில் ஏற்படும் 8 பக்க விளைவுகள்.!