கிரீன் டீயானது உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. இதில் உள்ள பாலீஃபீனால் என்னும் சத்து தான் உடல் எடையைக் குறைக்க உதவுகிறது
1
30-50 மிகி காப்ஃபைன் உள்ள இதனை அளவாக தினமும் குடித்து வர பாதுகாப்பான வழியில் உடல் எடை குறையும். ஆகவே எடையை குறைக்க உதவும் பானங்களுள் சிறந்த ஒன்றாக கிரீன் டீயை சொல்லலாம்
2
ஆய்வுகளில் எபிகேலோகேட்டசின் கேலேட்டிற்கு உடலில் வளரும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து அழிப்பதாக தெரிய வந்துள்ளது.
3
பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை கிரீன் டீ குறைக்கிறது
கிரீன் டீயில் தயனைன் உள்ளது. இந்த அமினோ அமிலம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கும் ஆன்டி-பாடிகளை வழங்கும். இதனால் உடலைத் தாக்கும் நோய்களின் எண்ணிக்கையும் குறையும்
4
வெறும் வயிற்றில் கிரீன் டீயைக் குடிக்கும் போது அதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் & காப்ஃபைன் உடலின் ஆற்றலை அதிகரித்து மெட்டபாலிசத்தை தூண்டி கொழுப்புச் செல்களை கரையச் செய்கிறது
5
கிரீன் டீயை ஒருவர் தினமும் குடித்து வந்தால் அதில் உள்ள உட்பொருட்கள் வாயை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு வாய் துர்நாற்ற பிரச்சனையில் இருந்தும் விடுவிக்கும்
6
கிரீன் டீயில் உள்ள பாலிஃபீனால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்கி, சர்க்கரை நோய் வரும் அபாயத்தைக் குறைக்கும்.
7
கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், கிரீன் டீயை வெறும் வயிற்றில் ஒரு கப் குடித்தால், அதில் உள்ள மருத்துவ பண்புகள் உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்கிறது
8
இரத்த அழுத்த பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், அன்றாடம் கிரீன் டீயைக் குடித்து வர, அது இரத்த அழுத்த பிரச்சனையைத் தடுப்பதாக ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
9
கிரீன் டீ உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதால், அது இதய நோய் வரும் அபாயத்தைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்
10
கிரீன் டீயில் காப்ஃபைனுடன், L-தயனைன் என்னும் அமினோ அமிலமும் உள்ளது. இவை இரண்டும் மூளையின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்வதோடு, அதன் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
11
எந்த உணவை எடுக்கொள்வதாக இருந்தாலும் மருத்துவ ஆலோசனைக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்