தேக்கடியில் தொடங்கிய மலர் கண்காட்சி... கோடை விடுமுறையில் மிஸ் பண்ணிடாதீங்க.!
தமிழக-கேரளா எல்லையான குமுளி அருகே உள்ள தேக்கடியில் தேக்கடி வேளான் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மண்ணாரத்தரை கார்டன் இணைந்து நடத்தும் தேக்கடி 16 வது மலர்கண்காட்சி தேக்கடி குமுளி ரோட்டில் கல்லறைக்கல் மைதானத்தில் தொடங்கியது
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மலர்களும், நூற்றுக்கணக்கான மருத்துவ மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள், தோட்டச் செடிகள், சமையலறை தோட்டம் அமைக்க தேவையான செடி நாற்றுகள் அனைத்தும் பார்வையாளர்களை கவரும் வகையில் இடம் பெற்றுள்ளது
மேலும் வேளான் குறித்த கருத்தரங்கம், விவசாயம் குறித்த சந்தேகங்கள் மற்றும் பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டிகள், சமையல் போட்டி, குழந்தைகளுக்காக விளையாட்டரங்கம், இன்னிசை கச்சேரி,ஆடல் பாடல் நிகழ்ச்சி,
மீன் கண்காட்சி, வீட்டு வளர்ப்பு விலங்குகளின் கண்காட்சியும் இயற்கை காய்கறி, மழைநீர் சேகரிப்பு, போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கும் இந்த மலர்கண்காட்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்த மலர்கண்காட்சி வரும் மே 12ஆம் தேதி வரை சுமார் 47 நாட்கள் தொடர்ந்து மலர் கண்காட்சி நடைபெறும் என குமுளி பஞ்சாயத்து தலைவர் தெரிவித்துள்ளார்