ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த கொண்டாட்டத்தில் விருந்தினர்களுக்கு பரிமாறப்படவுள்ள உணவு வகைகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியன், தாய், ஜப்பானிய, மெக்சிகன், பார்சி மற்றும் பான் ஆசியன் உள்ளிட்ட உலகளாவிய உணவு வகைகள் நிறைந்து சுமார் 2,500 உணவுகள் மெனுவில் இடம்பெற்றுள்ளது.
காலையில் விருந்தினர்களுக்கு 75 வகை உணவுகள் வழங்கப்படவுள்ளது.
மதிய உணவிற்கு சுமார் 225 வகை உணவுகள் விருந்தினர்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரவு பிரம்மாண்டமாக 275 வகைகளில் உணவு விருந்தினர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நள்ளிரவில் தொடங்கி அதிகாலை 4 மணி வரை 85 வகை உணவுகள் வழங்கப்படவுள்ளது.
கொண்டாட்டத்திற்கு வரும் விருந்தினர்களுக்காக இந்த உணவுகள் பிரத்யேகமாக தயாரிக்கப்படவுள்ளது.
மூன்று நாட்கள் கொண்டாட்டத்தில் 4 வேளைகள் என 12 முறை வெவ்வேறு உணவுகள் வழங்கப்படும்.
ஒருமுறை வழங்கப்பட்ட உணவு அடுத்த முறை மீண்டும் வழங்கப்படதாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெவ்வேறு நாடுகளில் இருந்து சிறந்த சமையல் கலை நிபுணர்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.