உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பது தொண்டையில் ஏற்படும் அசௌகரியத்தை நீக்கி வீக்கத்தைக் குறைக்கும்
உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதை மருத்துவ மொழியில் 'ஹைப்பர்யூரிசிமியா' எனக் கூறுவார்கள்
ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையை பலரும் பின்பற்றி வருவதால் வயது வித்தியாசமின்றி பலர் ஹைப்பர்யூரிசிமியாவால் பாதிக்கப்படுகின்றனர்
பொதுவாக, நமது உடலில் உள்ள யூரிக் ஆசிட் சிறுநீரின் மூலம் வெளியேறும். இருப்பினும், சில காரணங்களால், நமது சிறுநீரகங்கள் உடலில் இருந்து யூரிக் ஆசிடை வெளியேற்ற முடியாமல் போகும்
அப்போது கீல்வாதம் அல்லது சிறுநீரக கற்கள் போன்ற கடுமையான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது
அப்படிப்பட்ட யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் சிறந்த 5 பானங்கள் அடுத்தடுத்த ஸ்லைடுகளில்...
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கிரீன் டீ யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும். எனவே தினமும் காலையில் ஒரு கப் கிரீன் டீ குடிக்கவும்
1
அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் உள்ளதால் இது வீக்கத்திற்கு உதவுகிறது. எனவே தினமும் ஒரு கிளாஸ் புதிய அன்னாசி பழச்சாறு குடிக்கவும்
2
செலரி யூரிக் அமில அளவுகளுக்கு உதவுவதாக அறியப்படுகிறது. எனவே புதிய செலரி தண்டுகளை போட்டு ஜூஸ் அடித்து குடிக்கவும்
3
செர்ரிகள் அவற்றின் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றவை மற்றும் யூரிக் அமிலத்தை குறைக்க உதவும். எனவே 100% செர்ரி ஜூஸை குடிக்கவும்
4
எலுமிச்சை சாறு உடலில் காரத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது மற்றும் யூரிக் அமில அளவைக் குறைக்கும். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து குடிக்கவும்
5
இங்கே குறிப்பிட்டுள்ளவை பொதுவான தகவலை மட்டுமே தருகிறது மற்றும் தகுதியான மருத்துவ கருத்துக்கு எந்த வகையிலும் மாற்றாக இல்லை
தினமும் காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்.!